அதிகாலையில் சீக்கிரம் எழுந்துவிட வேண்டும் என்று நினைப்பவர்களா!!! அதற்கு சில டிப்ஸ் இதோ!!!
அதிகாலையில் சீக்கரம் எழுந்துவிட முயற்சி செய்பவர்கள் அனைவருக்கும் காலையில் சீக்கிரமாக எழுவதற்கு சில எளிமையான டிப்ஸ் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அதிகாலையில் சீக்கிரமாக எழுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. சீக்கிரம் எழுவதால் உடல் எடையை கட்டுப்படுத்தலாம். அதிகாலையில் சீக்கிரம் எழுவதால் பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கின்றது. மேலும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவி செய்கின்றது. அதிகாலையில் சீக்கிரம் அதாவது சூரிய உதயத்திற்கு முன்பாக எழுவதற்கு இந்த பதிவில் சில எளிமையான டிப்ஸ் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
சூரிய உதயத்திற்கு முன்பு எழுவதற்கு சில எளிமையான வழிமுறைகள்…
* காலையில் சீக்கரமாக எழுவதற்கு அந்த நேரத்திற்கு அதாவது காலையில் எத்தனை மணிக்கு எந்திருக்க வேண்டுமோ அந்த நேரத்திற்கு இரவு அலாரம் வைத்துக் கொண்டு தூங்கலாம்.
* காலையில் சீக்கிரமாக எழுவதற்கு இரவில் தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
* காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்திருக்க வேண்டும் என்றால் இரவு நேரத்தில் தூங்கச் செல்வதற்கு முன்னர் நொறுக்குத் தீனி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
* காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க இரவில் தூங்கச் செல்லும் முன்னர் காஃபின் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
* இரவில் தூங்கச் செல்லும் முன்பு செல்போனை ஒரு மணி நேரத்திற்கு ‘டூ நாட் டிஸ்டர்ப் மோட்’ வைத்து விட்டு தூங்கலாம்.
* காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க இரவு நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
* தூங்குவதற்கு முன்னர் ஜன்னலை திறந்து வைத்துவிட்டு தூங்கலாம். இதனால் காலை நேரத்தில் சூரிய ஒளி நமது அறைக்குள் வருவதால் சீக்கிரமாக எழுந்து விடலாம்.
* தூங்கச் செல்லும் முன்பு அலாரம் வைத்து விட்டு அதை படுக்கையில் இருந்து சிறிது தள்ளி வைத்துவிட்டு படுக்கலாம். இதனால் காலையில் சீக்கிரமாக எழுந்துவிடலாம்.