Kanavu Palangal in Tamil : நம் கனவில் பாம்பு வந்தால் நல்லதா? கெட்டதா? 

0
59

Kanavu Palangal in Tamil : நம் கனவில் பாம்பு வந்தால் நல்லதா? கெட்டதா?

மனிதர்கள் தூங்கும் போது கனவுகள் வரும். அந்த கனவுகள் நல்லாவதாகவும் இருக்கும், சில சமயம் கெட்டதாகவும் இருக்கும். ஆனால், அதற்கான அர்த்தம் தான் நமக்கு தெரியாது. சிலருக்கு நிகழப்போவதை மறைமுகமாக வேறு ரூபத்தில் கூட கனவுகள் மூலம் தெரியவரும். சில சமயங்களில் பாம்பு கனவில் வந்தால் குல தெய்வத்திற்கு நேத்திக்கடன் செய்ய வேண்டி இருந்தால் அதை நிறைவேற்ற வேண்டும்.

அப்படி நம் கனவில் பாம்பு வந்தால் நல்லதா, கெட்டதா என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம் –

நம் கனவில் ஒரு பாம்பு படுக்கையில் விழுவது போல கனவு கண்டால் அது பாலியல் சிற்றின்பத்தின் அடையாளமாக காணப்படுமாம்.

கனவில் பாம்பு உங்களை விரட்டுவது போல் இருந்தால், உங்களுக்கு வறுமை ஏற்படப்போகிறது என்று அர்த்தமாம்.

நம் கனவில் பாம்பு நம்மை கடித்தால், நல்ல சகுனமாம். நம்மை பிடித்திருந்த பீடை விளக்கப்போகிறது என அர்த்தமாம்.

நம் கனவில் நம் வீட்டில் பாம்பு நுழைந்து அமைதியாக வெளியேறினால், நீங்கள் வேண்டிய நேத்திக்கடனை விரைவில் செலுத்த வேண்டும் என்று அர்த்தமாம்.

நம் கனவில் பாம்பு தலைக்கு மேல் குடை பிடிப்பது போல நின்றால், தெய்வத்தின் பார்வை உங்கள் குடும்பத்தின் மீது உள்ளது என்று அர்த்தமாம்.

நம் கனவில் பாம்பை யாரும் மிதிக்காதவாறு ஏறிச்செல்வது போல கனவு வந்தால், பணி செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கப்போகிறது என்று அர்த்தமாம்.

உங்கள் கனவில் நீங்கள் ஒரு பாம்பை கொலை செய்வது போல் கனவு வந்தால், உங்களுக்கு வர இருக்கும் ஆபத்து விலகிவிட்டது என்று அர்த்தமாம்.

உங்கள் கனவில் ஒற்றை நல்ல பாம்பு கனவில் வந்தால் உங்களுக்கு விரோதிகளால் தொல்லை ஏற்படப்போகிறது என்று அர்த்தமாம்.

உங்கள் கனவில் நல்ல பாம்பு ஜோடியாக வந்தால், அது நல்ல சகுனமாம்.

உங்கள் கனவில் பாம்பை கையில் பிடிப்பதை போன்ற கனவு வந்தால், உங்களுக்கு தனலாபம் உண்டாகப்போகிறது என்று அர்த்தமாம்.

author avatar
Gayathri