கள்ளத்தனமாக 10 ஆண்டுகளாக மது விற்பனை செய்த பெண்!!! அந்த பெண்ணுக்கு போலீசார் செய்த செயலை பாருங்க!!!

0
95

கள்ளத்தனமாக 10 ஆண்டுகளாக மது விற்பனை செய்த பெண்!!! அந்த பெண்ணுக்கு போலீசார் செய்த செயலை பாருங்க!!!

சென்னை மாவட்டத்தில் ஐஎஸ் அவுஸ் பகுதியில் 10 ஆண்டுகளாக மது விற்பனை செய்து வந்த பெண் ஒருவருக்கு அந்த பகுதியை சேர்ந்த காவல் துறையினர் மிகப் பெரிய உதவி ஒன்றை செய்துள்ளனர். அந்த காவல் துறையினர் பெண்ணுக்கு செய்த உதவி அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று வருகின்றது.

சென்னை மாவட்டம் ஐஎஸ் அவுஸ் பகுதியில் 42 வயதுடயை பாலம்மாள் என்ற பெண் கள்ளத்தனமாக 10 ஆண்டுகளாக மது விற்பனை செய்து வந்தார். இதையடுத்து பாலம்மாள் மீது காவல்துறையினர் பலமுறை வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்தனர்.

இருந்தும் பாலம்மாள் வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் மீண்டும் மீண்டும் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக விற்பனை செய்து வந்துள்ளார். அவரை திருத்தி நல்வழிபடுத்த முடிவு செய்தனர் இதையடுத்து ராயப்பேட்டை உதவி கமிஷனர் பாலமுருகன், ஐஎஸ் அவுஸ் இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணராஜ் ஆகியோர் பாலம்மாள் அவர்களை அழைத்து பேசியுள்ளனர்.

இதில் பாலம்மாள் அவர்கள் எனக்கு மது பாட்டிலை தவிர வேறு எதுவும் தெரியாது என்று கூறினார். தொடர்ந்து பேசிய காவல் துறையினர் பாலம்மாள் அவர்களின் மனதை மாற்றினர். முடிவில் பாலம்மாள் அவர்கள் காவல் துறையினரிடம் டிபன் கடை வைத்து தந்தால் அதை வைத்து நான் எனது வாழ்க்கையை பார்த்துக் கொள்வேன் என்று கூறினார்.

இதையடுத்து காவல் துறையினர் இணைந்து பாலம்மாள் அவர்களுக்கு தள்ளுவண்டி, பாத்திரங்கள், கரண்டிகள், தட்டுகள் மற்றும் டிபன் கடைக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி கொடுத்தனர். முதலில் பிரிஞ்சி வியாபாரம் செய்ய விரும்புவதாக பாலம்மாள் கூறினார். இதையடுத்து நான்கு நாட்களுக்கு தேவையான உணவையும் வாங்கித் தருவதாக காவல் துறையினர் கூறினர்.

இதையடுத்து இன்று(செப்டம்பர்3) முதல் பாலம்மாள் அவர்கள் டிபன் கடையை தொடங்கியுள்ளார். ஐஎஸ் அவுஸ் பகுதியின் காவல் துறையினரின் கருணை உள்ளத்தை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். மேலும் காவல்துறையினர் பாலம்மாள் அவர்களுக்கு செய்த செயல் அனைவரின் மத்தியில் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்று வருகின்றது.

Previous articleஅடுத்தடுத்து விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோ!!! அடுத்த விண்கலம் எதற்கு என்று தெரியுமா!!!
Next articleஹிட்லரின் ஆட்சியில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு!!! 80 ஆண்டு காலம் நடந்து வந்த வழக்கில் வெளியானது தீர்ப்பு!!!