வந்தாச்சு மத்திய அரசு வேலை.. AFMS ஆயுதப்படை மருத்துவ சேவையில் பணி புரிய விருப்பமா? விண்ணப்பிக்க செப்டம்பர் 10 கடைசி நாள்!

0
107
#image_title

வந்தாச்சு மத்திய அரசு வேலை.. AFMS ஆயுதப்படை மருத்துவ சேவையில் பணி புரிய விருப்பமா? விண்ணப்பிக்க செப்டம்பர் 10 கடைசி நாள்!

மத்திய அரசின் ஆயுதப்படை மருத்துவ சேவையில் (AFMS) காலியாக உள்ள 650 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதன்படி மருத்துவ அதிகாரி (MO) பதவிக்கு 585 ஆண்கள் மற்றும் 65 பெண்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 10-09-2023 வரை வரவேற்கப்படுகிறன.

வேலை: மத்திய அரசு வேலை

ஆயுதப்படை மருத்துவ சேவையில் Medical Officer பதவி

காலியிடங்கள்: இப்பணிக்கு மொத்தம் 650 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள்: 585 பணியிடங்கள்

பெண்கள்: 65 பணியிடங்கள்

Medical Officer பதவிக்கு கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் MBBS அல்லது PG டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

வயது வரம்பு: ஆயுதப்படை மருத்துவ சேவையில் Medical Officer பதவிக்கு MBBS அல்லது PG டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு வயது 30க்குள் இருக்க வேண்டும்.அதேபோல் முதுகலை பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு வயது 35க்குள் இருக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசின் விதிகளின் படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

1.Scrutiny of Application

2.Interview

3.Document Verification

4.Medical Examination

விண்ணப்பக் கட்டணம்: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ரூ.200/- விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Medical Officer பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ AFMS http://www.amcsscentry.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.அதில் Career/Advertisement பிரிவை கிளிக் செய்யவும்.அதில் Medical Officer வேலை அறிவிப்பை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கவும்.பிறகு அவற்றை பூர்த்தியிட்டு முறையான சான்றிதழ்களுடன் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கடைசி தேதி: Medical Officer பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10-09-2023 ஆகும்.

Previous articleமாதம் 15000 சம்பளத்தில் சுகாதாரத் துறையில் வேலை! விண்ணப்பிக்க செப்டம்பர் 13 கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க!
Next articleநின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து!!! குழந்தை உட்பட பரிதாபமாக 6 பேர் பலி!!!