போகும்போது குடையுடன் போங்க!! மீண்டும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது தமிழகத்தில் காற்றின் திசை வேகமாக மாறுபாடு காரணமாக பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதையடுத்து இன்னும் 4 நாட்களுக்கு கனமழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது பற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக இன்று 06.09.2023 தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதுபோல கோவை மாவட்டத்தின் மலைப்பகுதி மற்றும் நீலகிரி, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
07.09.2023 – தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
08.09.2023 – 10.09.2023 தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கோவை மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
11.09.2023-12.09.2023 தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
அதுபோல சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு வானம் , மேகமூட்டத்துடனும், நகரின் சில பகுதிகளில் லேசானது அல்லது மிதமான மழையும் பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26- 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையத்தின் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.