குரூப்-1 தேர்வு எப்போது? மௌனம் காக்கும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் !!

0
35
#image_title

குரூப்-1 தேர்வு எப்போது? மௌனம் காக்கும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம்

டிஎன்பிஎஸ்சி வெளியிடப்பட்டுள்ள தேர்வு அட்டவணைப்படி ஆகஸ்ட் மாதம் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் ஆகஸ்ட் மாதம் முடிந்தும் செப்டம்பர் மாதம் வந்தும் குரூப்-1 தேர்வுக்கான எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாவில்லை. லட்சக்கணக்கான தேர்வர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் குருப்-1 தேர்வு குறித்து அறிவிக்காமல் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் மௌனம் காப்பது ஏன்? என தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது டி.என்.பி.எஸ்.சி ஆணையம் நிரந்தர தலைவர் இல்லாமலும் உரிய உறுப்பினர்கள் இல்லாமலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த மாதம் ஓய்வு பெற்ற தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு அவர்கள் டிஎன்பிஎஸ்சி ஆணையத்திற்கு தலைவராக வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான பரிந்துரை ஆவணங்களையும் ஆளுநரிடம் அனுப்பி வைத்து.

ஆனால் ஆளுநர் ரவி அவர்கள் சைலேந்திரபாபு அவர்களை டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமிக்க முடியாது என்றும் இது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ஆனால் தமிழக அரசு சைலேந்திரபாபு அவர்களை டிஎன்பிஎஸ்சி ஆணையத்திற்கு தலைவராக நியமிக்க வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று லட்சக்கணக்கான தேர்வர்கள் காத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் குரூப்-4 தேர்வு குறித்து அறிவிப்பும் இந்தாண்டு வெளியாகுமா? இல்லை அதற்கும் டிஎன்பிஎஸ்சி ஆணையம் மௌனம் சாதிக்குமா? என்று லட்சக்கணக்கான தேர்வர்கள் சரிவர படிக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி ஆணையம் விரைவில் இது குறித்து உரிய விளக்கமும் அறிவிப்பாணையும் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

author avatar
Parthipan K