டிப்ளமோ படிப்பிற்கு மத்திய அரசின் FACT நிறுவனத்தில் வேலை!! மாதம் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம்!!
கேரளா மாநிலம் உத்யோகமண்டல் பகுதியில் இயங்கி வரும் உரம் மற்றும் ரசாயனம் திருவாங்கூர் லிமிடெட் (FACT) நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்நிறுவனத்தில் டெக்னீசியன் (ப்ராசஸ்) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வேலை: மத்திய அரசு பணி
நிறுவனம்: உரம் மற்றும் ரசாயனம் திருவாங்கூர் லிமிடெட் (FACT)
பணி: டெக்னீசியன் (ப்ராசஸ்)
கல்வி தகுதி: டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி,இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி அல்லது டிப்ளமோவில் கெமிக்கல் என்ஜினீயரிங், கெமிக்கல் டெக்னாலஜி உள்ளிட்ட பிரிவுகளில் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 26க்குள் இருக்க வேண்டும்.மத்திய அரசின் விதிகளின் படி எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரை மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரை தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
*எழுத்து தேர்வு
*நேர்க்காணல்
விண்ணப்பிக்கும் முறை: ஸ்பீட் போஸ்ட் அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட்
இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் www.fact.co.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஸ்பீட் போஸ்ட் அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.விண்ணப்பத்தின் மேல் “Application for the post of Technician(Process) on FTB)” என எழுதி அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:
DGM (HR),HR Department,FEDO Builing,FACT,Udyogamandal,PIN – 683 501.
கடைசி தேதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 18 கடைசி தேதி ஆகும்.