கல்வி தகுதி: டிப்ளமோ.. SJVN நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 9!
SJVN நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Field Engineer, Field Officer உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 153 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
.அதன்படி காலியாக உள்ள Field Engineer, Field Officer பணியிடங்களுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் நாளை அதாவது 09-09-2023 வரை ஆன்லைன் வழியாக வரவேற்க படுகின்றன.
நிறுவனம்: SJVN Limited
பணிகள்:
1.Field Engineer
2.Field Officer
காலியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 153 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழத்தில் Bachelor Degree in Engineering / MBA / Post Graduate Degree / Diploma / LLB / Graduate உள்ளிட்ட துறைகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
Field Engineer,Field Officer பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாத ஊதியம்: Field Engineer,Field Officer பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.6000/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
.
தேர்வு செய்யப்படும் முறை:
*CBT / Written Test
*Group Discussion
*நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
Field Engineer,Field Officer பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://sjvnindia.com/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தில் முறையான விவரங்களை கொடுத்து ஆன்லைன் வழி விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை அதாவது செப்டம்பர் 9 கடைசி தேதி ஆகும்.