கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு.. நல்ல சம்பளத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை! செப்டம்பர் 18 இறுதி நாள்!

0
41
#image_title

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு.. நல்ல சம்பளத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை! செப்டம்பர் 18 இறுதி நாள்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 Driver Cum Conductor பணியிடங்களுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வேலை

பணி: Driver Cum Conductor

காலியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 685 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Driver Cum Conductor பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்மென்று சொல்லப்பட்டுள்ளது.

வயது வரம்பு: Driver Cum Conductor பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 24 என சொல்லப்பட்டுள்ளது.அரசு விதிகளின்படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

ஊதியம்: Driver Cum Conductor பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.17,700/- முதல் ரூ.56,200/- வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

*எழுத்து தேர்வு

*நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Driver Cum Conductor பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி,ஆர்வம் இருக்கும் நபர்கள் www.tnstc.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகி அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் முறையான விவரங்களை கொடுத்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 18 கடைசி தேதி ஆகும்.