நடிகர் மாரிமுத்து மறைவிற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல்!!

0
101
#image_title

நடிகர் மாரிமுத்து மறைவிற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல்!!

கடவுள் மறுப்பாளரும், பிரபல நடிகர் மற்றும் இயக்குநருமான மாரிமுத்து அவர்களின் மறைவிற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இயக்குனரும், நடிகருமான ராஜ்கிரண் அவர்களின் உதவியாளராக தனது திரையுலக பயணத்தை தொடங்கியவர் நடிகர் மாரிமுத்து. அதைதொடர்ந்து, இயக்குனர் வசந்த், நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா, நடிகர் சிலம்பரசனிடம் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராகவும், துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் வாலி என்னும் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். பின்னர் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவான யுத்தம் செய் எனும் படத்தின் மூலம் முழு

நேர நடிகராக அவதாரம் எடுத்தார்.

பிரசன்னா அவர்களை வைத்து கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய இரு படங்களையும் இயக்கினார். தற்போது எதிர்நீச்சல் என்னும் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரம் மூலம் மக்கள் மனதில் நீங்காது இடம் பிடித்தார்.

இந்நிலையில் இன்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசி முடித்துவிட்டு, வீட்டிற்கு திரும்பிய போது வழியிலேயே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மரணமடைந்தார். அவர் உயிரிழந்த செய்தியை அறிந்து திரையுலகத்தினரும் சின்னத்திரை கலைஞர்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களும் நடிகர் மாரிமுத்து அவர்களின் இறப்புக்கு இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.

திரைப்பட உதவி இயக்குநர், இயக்குநர், நடிகர் என தன் திறமையால், நீண்டகால உழைப்பால் மக்களின் மனதில் இடம்பிடித்த திரைக்கலைஞர் மாரிமுத்து என்று புகழாரம் சூட்டினார். அவர் மாரடைப்பால் மறைவெய்திய செய்தி துயரத்தை தருகிறது என்றும், எளிய மக்களின் அன்பை பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல;

அதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பு அசாத்தியமானது என்று குறிப்பிட்டுள்ளார் . அந்த உழைப்பின் பயனை, மகிழ்ச்சியை அடைவதற்குள் மறைவெய்தியது ஆற்றொண்ணா துயரமடைவதாக வேதனை தெரிவித்தார்.

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குனர் வசந்த், எஸ்.ஜே. சூர்யா, சின்னத்திரை கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.

Previous articleவெற்றிமாறனின் “விடுதலை” பார்ட் 2 எப்போ? வெளியான புதிய அறிவிப்பு!
Next articleவீடியோ கால் பெண்கள் : சிக்கும் ஆண்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்