வீடியோ கால் பெண்கள் : சிக்கும் ஆண்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்

0
82
#image_title

வீடியோ கால் பெண்கள் : சிக்கும் ஆண்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்

சில நூறு ரூபாய்க்களை தந்தால் போதும் வீடியோ காலில் பேசி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று பெண்கள் சிலர் ஆண்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக கவர்ந்து, அவர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீப நாட்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையம் வழியாக நடைபெறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க சைபர் கிரைம் போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து தான் வருகின்றன. ஆண்களின் சபல எண்ணத்தை பயன்படுத்தி அவர்களின் ஆசையை தூண்டி பெண்கள் சிலர் சமூக வலைத்தளங்கள் வழியாக ஏமாற்றி வருகின்றனர். அந்த வகையில் வீடியோ கால் மோசடியும் ஒன்று.

200, 300 ரூபாய் ஜி-பே, போன்- பே மூலமாக அனுப்பினால் போதும் வீடியோ காலில் தன்னுடைய அரை நிர்வாணம் அல்லது கவர்ச்சியாக தோன்றுவதாக பெண்கள் சிலர் ஆண்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக செய்தியை பரிமாறி வருகின்றனர். இதில் சிக்கும் ஆண்களை மிரட்டி, படிப்படியாக பல்லாயிரம் ரூபாய் பணத்தை பிடுங்குவதாகவும் புகார் கூறப்படுகிறது. சபல எண்ணத்தால் வீடியோ கால் பெண்களிடம் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழக்கும் ஆண்களும் உண்டு.

வீடியோ கால் மோசடி பெண்களிடம் சிக்காமல் தப்பிப்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் பல்வேறு விழிப்புணர்வு செய்திகளையும், தகவல்களையும் வெளியிட்டுள்ளனர். இருப்பினும் வீடியோ கால் பெண்களின் மோசடி வகையில் தினந்தோறும் ஆண்கள் சிக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதுபோன்று மோசடிகளில் சமூக வலைத்தளங்கள் வழியாக பெண்கள் சிலர் ஆண்களை சிக்க வைத்து வருகின்றனர்.

முன், பின் தெரியாத நபர்கள் ஆண்களாக இருந்தாலும் சரி; பெண்களாக இருந்தாலும் சரி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியாக உங்களிடம் பாலியல் ரீதியாக யாரேனும் அணுகினால் உடனே அவர்களை பிளாக் செய்து விடுங்கள் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K