அப்போ இந்தியா இல்லையா?? பிரதமர் முன் வைக்கப்பட்ட பலகையில் புதுப்பெயர்!!
தற்போது நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி இருக்கைக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் இந்தியா என்ற பெயர் இடம் பெறவில்லை.
தற்போது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பி வரும் பிரச்சனைகளில் ஒன்று இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்திருப்பது தான். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளன. சிலர் ஆதரிக்கவும் செய்துள்ளனர்.
எதிர்க்கட்சி கூட்டணிகள் இந்தியா என பெயர் வைத்ததற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி பாரத் என பெயர் மாற்றம் செய்வதாக ஏற்கனவே தகவல்கள் பரவி வந்தன. இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் ஜி 20 மாநாட்டின் அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இன்று மற்றும் நாளை டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இந்தி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பான ஜி 20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகித்து வருவதால் இந்த மாநாட்டிற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இன்று காலை ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரத் மண்டபத்திற்கு உலகத் தலைவர்கள் வந்தனர். அவர்கள் அனைவரும் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றதும் மாநாடு தொடங்கியது.
எப்போதும் மாநாட்டில் மாநாடு நடக்கிறது என்றால் அதில் கலந்து கொள்ளும் உலகத் தலைவர்களின் பெயர்களை குறிக்கும் வகையில் அவர்களுக்கு முன்னால் பெயர் பலகை ஒன்று வைக்கப்படும். அதேபோல் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களின் பெயர் பலகை நாட்டின் பெயருடன் இடம்பெற்றிருந்தது இதில் பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரதம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது சர்ச்சைகளை தற்போது கிளப்பி வருகிறது.
அப்படி எனில் இந்திய நாட்டின் பெயரை பாரத் என பெயர் மாற்றம் செய்யப் போவது உறுதி என்ற தகவல் பரவி வருகிறது.