எதிர்க்கட்சி தேசிய தலைவருக்கு அழைப்பு மறுப்பு!! ஜனநாயகம் இல்லாத நாட்டில் தான் இப்படி நடக்கும்  சிதம்பரம் கண்டனம்!!

எதிர்க்கட்சி தேசிய தலைவருக்கு அழைப்பு மறுப்பு!! ஜனநாயகம் இல்லாத நாட்டில் தான் இப்படி நடக்கும்  சிதம்பரம் கண்டனம்!!

குடியரசுத் தலைவர் அளிக்கும் சிறப்பு விருந்திற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்காததற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்புகளில் ஒன்று ஜி 20. அந்த அமைப்புடைய தலைமைப் பதவியை இந்தியா வகித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஜி 20 உச்சி மாநாடு இன்று மற்றும் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் பலரும் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளனர்.

இந்த ஜி 20 மாநாட்டை ஒட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் சிறப்பு விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இன்று இரவு அவர் அளிக்கும் இந்த சிறப்பு விருந்தில் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஆனால் குடியரசு தலைவரின் இந்த விருந்து நிகழ்ச்சிக்கு காங்கிரஸின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஏற்கனவே முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியிருந்தார். அதற்கு அடுத்ததாக தற்போது இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரசின் மூத்த தலைவரும் எம்பியும் ஆன ப.சிதம்பரம் கூறுகையில்,

உலகத் தலைவர்களுக்கான அரசு விருந்துக்கு அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரை வேறு எந்த ஜனநாயக நாடும் அழைப்பு விடுக்காமல் இருந்ததில்லை. மத்திய அரசின் இத்தகைய செயலை நடவடிக்கையை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

இது போன்ற நிகழ்வுகள் ஜனநாயகம் அற்ற அல்லது எதிர்க்கட்சிகளை இல்லாத ஒரு நாட்டில் தான் நடைபெறும். இந்தியா அதாவது பாரதம் இன்னும் ஜனநாயகமும் எதிர்க்கட்சியும் இல்லாமல் போகும் நிலையை இன்னும் எட்டவில்லை என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.