All Area – லையும் ஐயா கில்லிடா!! லியோ ரிலீஸ்க்கு முன்னரே தெறிக்கவிடும் விஜய்!!

0
46
#image_title

All Area – லையும் ஐயா கில்லிடா!! லியோ ரிலீஸ்க்கு முன்னரே தெறிக்கவிடும் விஜய்!!

தமிழ் திரைத்துறையில் முன்னணி மாஸ் ஹீரோவா வலம் வருபவர் விஜய்.இதுவரை தமிழில் 66 படங்கள் வரை நடித்துள்ள விஜய் தனக்கென உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார்.தற்பொழுது இவர் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ என்ற படத்தில் நடித்துள்ளார்.படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.வருகின்ற அக்டோபர் 19 அன்று இப்படம் திரையரங்கிற்கு வர இருக்கின்றது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார்.கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இந்த ரீல் ஜோடி இணைந்து நடித்துள்ளது.இவர்களை தவிர்த்து கவுதம் வாசுதேவ் மேனன்,மன்சூர் அலிகான்,அர்ஜுன்,மிஷ்கின்,பிரியா ஆனந்த்,சஞ்சய் தத் உட்பட பலர் இதில்நடித்துள்ளனர்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.படப்பிடிப்பின் போதே லியோ படத்தின் வெளிநாட்டு மற்றும் கேரளா திரையரங்க வெளியீட்டு விநியோக உரிமைகள் முறையே ரூ.60 கோடி மற்றும் ரூ.16 கோடிக்கு விற்பனையானது.இப்படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் லியோ ரிலீஸ்க்கு 40 நாட்கள் இருக்கும் நிலையில் இங்கிலாந்தில் செப்டம்பர் 7 ஆம் தேதி இப்படத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்டது.இந்நிலையில் தொடங்கப்பட்ட 12 மணி நேரத்தில் 60,000 பவுண்ட்ஸ்களுக்கு மேல் வசூல் செய்துள்ளது.தற்பொழுது இப்படம் டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் சாதனை புரிந்துள்ளது.அதாவது இங்கிலாந்தில் 92 இடங்களில் 175 காட்சிகளுக்கு 5500 டிக்கெட்டுகள் 60,000 பவுண்ட்ஸ்களுக்கு மேல் ($76000 அமெரிக்க டாலர்கள்) வசூலை ஈட்டியுள்ளது.லியோ ரிலீஸ்க்கு முன்னரே பயங்கர வரவேற்பு கிடைத்து வருவதால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.