இதை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை!! அமைச்சர் உதயநிதி ஓபன் டாக்!!
ஆட்சியே போனாலும் பரவாயில்லை சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
தற்போது டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் என பல உலக நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் முன்பு வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் பாரத் என குறிப்பிடப்பட்டு இருப்பது தற்போது விவாதமாகி உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது உறுதியாகிறது என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் ஆதரவு தெரிவித்தும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வரும் நிலையில், தமிழ்நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் ஆக உள்ள உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது,
இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்து இருந்தார். அதன்படியே பாரத் என மாற்றி விட்டார். தனது வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமருக்கு வாழ்த்துக்கள் எனக் கூறினார்.
அடுத்ததாக சனாதனம் குறித்து உதயநிதி கூறிய கருத்துக்கள் சர்ச்சையாகி வரும் நிலையில் தற்போது தொடர்ந்து சனாதனம் குறித்து அவர் கூறுகையில் சனாதனத்தை ஒழிப்பதற்காக நாங்கள் ஆட்சியை போனாலும் கவலைப்பட மாட்டோம்.
இதை ஒழிப்பது குறித்து அம்பேத்கர், பெரியார், அண்ணா, போன்ற தலைவர்கள் பேசாமல் விட்டதையா நான் பேசி விட்டேன்!??. மேலும் சனாதனம் குறித்து அண்ணா பேசிய கருத்துக்கள் அவரின் பெயரில் உள்ள கட்சியான அதிமுகவின் கருத்தை நான் அறிய விரும்புகிறேன் என அவர் தெரிவித்தார்.