உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை!! ஒரே ஆண்டிலேயே அடுத்த நிலநடுக்க துயரம் !!

0
61
Rising death toll!! Next earthquake disaster in one year !!
Rising death toll!! Next earthquake disaster in one year !!

உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை!! ஒரே ஆண்டிலேயே அடுத்த நிலநடுக்க துயரம் !!

மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்னும் ஏராளமானோர் கட்டிட இடிப்பாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான மொரோக்காவில் நேற்று இரவு 11.11 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பெருத்த சேதம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் சுமார் 6.8 ஆக பதிவடைந்த நிலநடுக்கத்தால் அந்த நாட்டில் உள்ள மாரகேஸ், அல்ஹவுஸ் அஷிலால்,சிஷவ், டரொண்ட், போன்ற நகரங்களில் பெரிதும் உணரப்பட்டுள்ளது. அதிலும் மாரகேஷ் என்ற நகரம் அதிக பாதிப்பை இந்த நிலநடுக்கத்தால் சந்தித்துள்ளது.

இரவு நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மக்கள் அனைவரும் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்ததால் கட்டிடங்கள் இடிந்ததும் அதன்  இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர். இதனிடையே முதல் கட்ட தகவலாக நிலநடுக்கத்தால் சுமார் 296 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் கட்டிட இடிப்பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 கடந்துள்ளது. அரசின் தகவல் படி இதுவரை சுமார் 632 பேர் நிலநடுக்கத்தால் உயிரிழந்ததாகவும், 329 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து வருவதால் கட்டிட இடிப்பாடுகளில் மக்கள் சிக்கி இருக்கலாம். இதனால் பலி எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. நிலநடுக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் அன்று துருக்கி மற்றும் சிரியா நாட்டின் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 50,000 மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் வடு மறைவதற்குள் அடுத்ததாக ஆப்பிரிக்க நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.