சிக்ஸர் அடித்து 10000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா!!! 10000 ரன்களை கடந்தவர் பட்டியலில் ஆறாவது வீரராக இணைந்தார்!!!

0
107
#image_title

சிக்ஸர் அடித்து 10000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா!!! 10000 ரன்களை கடந்தவர் பட்டியலில் ஆறாவது வீரராக இணைந்தார்!!!

இன்று(செப்டம்பர்12) நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் சிக்சர் அடித்து 10000 ரன்களை கடந்துள்ளார்.

இன்று(செப்டம்பர்12) தொடங்கிய ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தயா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து பேட் செய்து வருகின்றது.

இதில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 10000 ரன்களை அடிக்க 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இன்று(செப்டம்பர்12) நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 22 ரன்களை எடுத்து 10000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். அதுவும் இலங்கை பந்துவீச்சாளர் ரஜிதா வீசிய பந்தில் சிக்சர் அடித்து 10000 ரன்களை கடந்துள்ளார்.

இந்திய அளவில் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 10000 ரன்களை அடித்த ஆறாவது வீரராகவும் உலக அளவில் 15வது வீரராகவும் சாதனை படைத்துள்ளார். இன்று(செப்டம்பர்12) நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை போட்டியில் 10000 ரன்களை கடந்து சாதனை படைத்த ரோஹித்சர்மா அவர்கள் அரைசதம் அடித்து 58 ரன்கள் சேர்த்து துனித் வெல்லழகே வீசிய பந்தில் போல்ட் ஆகி ஆட்டமிழந்துள்ளார்.

இதுவரை இந்திய அணிக்காக எருநாள் பேட்டிகளில் ரோஹித் சர்மா அவர்கள் 30 சதங்கள் 50 அரைசதங்கள் அடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் உலக அளவில் ஒரு நாள் போட்டியில் அதிகபட்சமாக 264 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சதங்கள் அடித்த முதல் வீரரும் ரோஹித் சர்மா அவர்கள் தான்.

இந்திய அணிக்காக முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் 10000 ரன்களை கடந்தார். சச்சின் டெண்டுல்கர் 18426 ரன்களை கடந்து முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதைத் தொடர்ந்து விராட் கோஹ்லி அவர்கள் 13024 ரன்கள் எடுத்துள்ளார். சவுரவ் கங்குலி அவர்கள் 11363 ரன்களும், ராகுல் டிராவிட் 10889 ரன்களும், எம்.எஸ் தோனி அவர்கள் 10773 ரன்களும் அடித்துள்ளனர். தற்பொழுது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் ஆறாவது வீரராக ஒரு நாள் போட்டிகளில் 10000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

 

Previous articleஎன்னுடைய கணவர் அபிஷேக் பச்சனுடன் அந்த விஷயத்தில் இப்படி தான் இருப்பேன்! வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா ராய்!
Next articleஎம்ஜிஆர் மீது தீரா காதல் கொண்ட ரசிகர்கள் செய்த செயல்.. தமிழ்நாடே அதிர்ந்து போனது!!