விஜயகாந்துக்கு நன்றி கடன் செலுத்த தளபதி விஜய் தயார்!! விவகாரம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

0
103
#image_title

விஜயகாந்துக்கு நன்றி கடன் செலுத்த தளபதி விஜய் தயார்!! விவகாரம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

தமிழ் திரையுலகில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய்.தமிழில் 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டு திரைப்பயணத்தில் வெற்றிநடை போட்டு வருகிறார்.தற்பொழுது ‘லியோ’ படத்தில் நடித்துள்ள விஜய் அவர்கள் அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.இவரின் படம் வெளியாகிறது என்றாலே திரையரங்குகள் திருவிழா போல் காட்சியளிக்கும்.இந்நிலையில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க தயாராகி வரும் இவரின் ஆரம்பகால திரை வாழ்க்கையில் பல அவமானங்கள், தோல்விகளை சந்தித்தார்.ஆரம்ப காலத்தில் இவர் நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை.இதனால் இவரின் திரைப்பயணம் கேள்வி குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில் தான் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் விஜய்யின் ‘செந்தூரப்பாண்டி’ என்ற படத்தில் நடித்து அவரின் திரை வாழ்க்கைக்கு நம்பிக்கை கொடுத்தார்.ஒருவேளை விஜயகாந்த் மட்டும் அப்படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால் இன்று மாஸ் ஹீரோவாக கொண்டாடப்படும் விஜய் என்ற நபர் திரைத்துறையில் இல்லாமல் போயிருப்பார் என்பது தான் நிதர்சனம்.இப்படி தனக்கு மிகப்பெரிய உதவியை செய்த விஜயகாந்த் அவர்கள் உடல் நலமின்றி கஷ்டப்பட்ட காலத்தில் ஒருமுறை கூட விஜய் நேரில் சென்று பார்க்கவில்லை என்பது தான் வேதனை.விஜய் அவர்கள் வளர்ந்ததும் விஜயகாந்த் செய்த உதவியை மறந்து விட்டார் என்று பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில் தற்பொழுது விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முகப் பாண்டியன் நடித்து வரும் படைத்தலைவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க விஜய்யிடம் பேச்சுவார்த்தையில் படக்குழு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து விஜய்யின் திரை வாழ்க்கையை உயர்த்திய கேப்டனுக்கு நன்றி கடனாக அவரது மகன் நடிக்கும் படைத்தலைவன் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து சண்முகப் பாண்டியனின் திரை வாழ்க்கைக்கு நல்ல தொடக்கத்தை தர வேண்டுமென்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Previous articleஏய்… யார்ரா அவன்? தன் சுழற்பந்தில் கோலி, கில், ரோஹித்தை வீழ்த்தி அசர வைத்த 20 வயது இலங்கை வீரர்!
Next articleஐசிசி வெளியிட்ட சிறந்த வீரருக்கான பட்டியல் – கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்து அசத்தல்!