‘சலார்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு – படக்குழு அறிவிப்பு!!

0
82
#image_title

‘சலார்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு – படக்குழு அறிவிப்பு!!

கேஜிஎஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் தற்பொழுது “சலார்” என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது.தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
பான் இந்திய திரைப்படமாக தமிழ்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழியில் உருவாகி இருக்கிறது.

இதற்கு முன் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘ஆதிபுருஷ்’ தோல்வி படமாக அமைந்ததால் இந்த ‘சலார்’ திரைப்படத்தை வெற்றிப் படமாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.
இப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.இவர்களை தவிர்த்து மலையாள நடிகர் பிருத்விராஜ்,ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த ‘சலார்’ திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் சில எதிர்பாராத காரணங்களால் ‘சலார்’ திரைப்படத்தை அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் அதிகாரப்பூர்வ பட வெளியீட்டு தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் ‘சலார்’ படக்குழு தெரிவித்துள்ளது.

Previous articleசான்றிதழ் பெறுவதற்கு பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்!!! சான்றிதழ் கொடுப்பதற்கு லஞ்சம் கேட்ட தலைமை ஆசிரியர்!!!இணையத்தில் வீடியோ வைரல்!!! 
Next articleதந்தைக்கு அறுவை சிகிச்சை.. கண்டுகொள்ளாத விஜய்!! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!