ஏ.ஆர்.ரகுமானை பார்த்து சுதாரித்து கொண்ட விஜய்!! இது மட்டும் வேண்டாம்.. இயக்குநருக்கு போட்ட உத்தரவு!!

0
115
#image_title

ஏ.ஆர்.ரகுமானை பார்த்து சுதாரித்து கொண்ட விஜய்!! இது மட்டும் வேண்டாம்.. இயக்குநருக்கு போட்ட உத்தரவு!!

சென்னை பனையூரில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏ.ஆர்.ரகுமான் தலைமையில் “மறக்குமா நெஞ்சம்” என்ற பெயரில் இசை நிகழ்சி நடத்தப்பட்டது.இந்த இசை நிகழ்ச்சியை காண ரசிகர்களிடம் ரூ.1,000 முதல் ரூ.50,000 வரை வசூலிக்கப்பட்டது.ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரி என்பதால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

பிரபல ACTC நிறுவனத்திற்கு இந்த “மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் போதிய இருக்கை,பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய ACTC நிறுவனம் தவறிவிட்டதால் டிக்கெட் வாங்கியும் மக்களால் அந்த நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போனது.இதனால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ACTC நிறுவனத்தினர் மக்களிடம் மன்னிப்பு கேட்டு இருந்தனர்.இந்நிலையில் மக்கள் மனதில் மிகப்பெரிய உயரத்தில் இருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பெயர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மொத்தமாக மாறி விட்டதென்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக விஜய்யின் “லியோ” படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியையும் ACTC நிறுவனம் தான் ஏற்பாடு செய்வதாக இருந்தது.இந்நிலையில் தற்பொழுது “மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக ஏ.ஆர்.ரகுமானுக்கு ஏற்பட்ட அசிங்கத்தை போல் தனக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இயக்குநர் லோகேஷ் மற்றும் தயாரிப்பாளர் லலித்திடம் “லியோ” படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு வேறு நிறுவனத்தை பார்க்க சொல்லி விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Previous articleஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்த வழக்கு!!! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்த நீதி மன்றம்!!!
Next articleஅவர் உங்களிடம் சிலைவைத்து ஊர்வலமாக  எடுத்துச் செல்ல கேட்டாரா?? அதை வைத்து ஏன் அரசியல் செய்கிறீர்கள்?? ஐகோர்ட் கேள்வி!!