வீரர்கள் போராட வேண்டும்!! இந்திய அணிக்கு பயத்தை காட்டிய இலங்கை முன்னாள் வீரர் பாராட்டு!!

0
123
Players must fight!! Appreciation for former Sri Lankan player who showed fear to the Indian team!!
Players must fight!! Appreciation for former Sri Lankan player who showed fear to the Indian team!!

வீரர்கள் போராட வேண்டும்!! இந்திய அணிக்கு பயத்தை காட்டிய இலங்கை முன்னாள் வீரர் பாராட்டு!!

6 நாடுகள் பங்கேற்கும் 16-ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இலங்கையில் உள்ள கொழும்பு நகரின்  பிரேமதாசா ஸ்டேடியத்தில் சூப்பர் 4   சுற்றுகள் நடைபெறுகின்றன. இந்த ஆட்டத்தில்  லீக் சுற்றில் வெற்றி பெற்று அடுத்து நடைபெற இருக்கும், சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆகிய நாடுகள் இடம்பெற்றன.

இந்த சூப்பர் 4   சுற்றில் 4 அணிகளும் தலா ஒருமுறை மற்ற அணிகளுடன் மோத வேண்டும். அதில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழையும்.இந்த சூழ்நிலையில் சூப்பர்  4-இன் 4-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்ற இந்தியாவும், நடப்புச் சாம்பியன் இலங்கையும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சுழலுக்கு சாதகமான அந்த ஆடுகளத்தில் இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. எதிரணி தரப்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளும், சரித் அசலாங்கா 4 விக்கெட்டுகளும் மற்றும் மகேஷ் தீக்ஷனா ஒருவிக்கட்டும் வீழ்த்தி இருந்தனர். ஒரு நாள் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர்கள் இந்தியாவுக்கு எதிராக அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்துவது இதுவே முதல்முறை.

அடுத்ததாக 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியை  41.3 ஓவரில் 172 ரன்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆல் அவுட் செய்தனர். இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக நுழைந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த ஆட்டம் குறித்து இங்கே கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். அதில் அவர்,

இந்திய அணி இலங்கையை 41 ரன்களில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வெற்றி வித்தியாசம் பெரியது என்றாலும் குறைந்த இலக்கை கொண்டு விளையாடும் பொழுது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு ஒரு வலிமையான பயம் இலங்கை அணியால் கொடுக்கப்பட்டது. முக்கியமான கட்டத்தில் இலங்கை அணி பார்ட்னர்ஷிப் உருவாக்கியதால் இந்தியா அழுத்தத்திற்கு ஆளானது. ஆனாலும் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் மறக்க முடியாத வெற்றியைப் பெற்றுக் கொடுத்து விட்டனர்.

இந்திய அணிக்கு இதுபோன்ற ஒரு ஆட்டம் தான் தேவை. வீரர்கள் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட போராட வேண்டும். மேலும் பீல்டிங்கும் செய்ய வேண்டும். இது கூட்டு ஆட்டமாக இருந்ததால் இறுதிப் போட்டியில் வீரர்களை நல்ல நிலையில் வைத்திருக்கும் என அவர் கூறினார்.

மேலும் அவர் இலங்கை அணியையும் பாராட்டி பேசினார். அற்புதமான ஆட்டம். இந்தியா 80/0 என்ற நிலையில் இருந்த போதிலும் 213 ரன்களில் ஆட்டம் இழந்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக முதல்முறையாக சுழல் பந்து வீச்சாளர்கள் அனைத்து விக்கட்டுகளையும் வீழ்த்தியது சிறந்த முயற்சி. இலங்கை வீரர் துனித் வெல்லாலகே அற்புதமான செயல் திறனை கொண்டு 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சிறப்பான முறையில் பேட்டிங் திறனையும் வெளிப்படுத்தினார். அவர் தனது வயதை விட அதிக பக்குவம் கொண்ட வீரராக இருக்கிறார் என பாராட்டினார்.

Previous articleமாதம் 10000 ரூபாயில் ESI-யில் வேலை!!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!
Next articleடிப்ளமோ முடித்தவர்களே நீங்கள் ரெடியா!!! உங்களுக்காக மாதம் 80000 சம்பளத்துடன் வேலை இதோ!!!