மகன் இறந்த அடுத்த நொடி விவேக் இப்படி செய்தாரா.. யாரும் அறியாத பின்னணி!!

Photo of author

By Rupa

மகன் இறந்த அடுத்த நொடி விவேக் இப்படி செய்தாரா.. யாரும் அறியாத பின்னணி!!

தமிழ் சினிமாவானது நல்ல கலைஞர்கள் பலரை இழந்துள்ளது. அந்த வரிசையில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக்கும் ஒருவர். இவர் நகைச்சுவை மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்திருப்பார். இவரது ஒவ்வொரு படங்களிலும் காமெடி மூலம் மக்களுக்கு மூட நம்பிக்கை, சாதிய வேறுபாடு என எண்ணற்ற கருத்துக்களை போதித்திருப்பார். இவரின் இறப்பானது தமிழ் திரை உலகிற்கு பெரும் இழப்பு.

அது மட்டுமின்றி மரத்தை வெட்டி இயற்கைக்கு மாறான சூழலை ஏற்படுத்தி வரும் இந்த காலத்தில் மரத்தை வளர்ப்போம் என்ற பணியை கிரீன் கலாம் மூலம் தீவிரமாக செய்து வந்தார். அவர் இறக்கும் தருவாயிக்கு முன்பு ஒரு கோடி மரங்கள் நட வேண்டும் என்பதுதான் அவரது இலக்காக இருந்தது. கிட்டத்தட்ட பத்து லட்சத்திற்கும் மேலான மரங்களை தற்போது வரை நட்டுள்ளார்.

இவர் எங்கு மேடை ஏறினாலும் கட்டாயம் மக்களுக்கு சென்றடையும் வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனத் தொடங்கி தற்போது நடைபெறும் அரசியல் வரை பல கருத்துக்களை கூறுவார். அதுமட்டுமின்றி இவர் பத்மஸ்ரீ, கலைமாமணி விஜய் அவார்ட் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இப்பேற்பட்டவருக்கு தான் பல இன்னல்கள் அடுத்தடுத்த ஆக நடைபெற்றது.இவருக்கு இரு மகள்களும் பிரசன்ன குமார் என்ற ஒரு மகனும் உள்ளார். இவரது மகன் பிரசன்ன குமார் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இரண்டு வருட காலமாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இவரது மகன் உயிர் இழப்பதற்கு முன்பாக தான் இவரது தந்தை அந்த சோகமே மறையாமல் இருந்த நிலையில் இவரது மகன் இறப்பை பெரிதளவில் வெளியே காட்டிக் கொள்ளாமலேயே இருந்து வந்தார்.ஆனால் விவேக் அவர்கள் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசினார்.

அதில், என் மகனுடனான என்னுடைய தொடர்பு மிகவும் குறுகியது தான். அவனுக்கு எப்பொழுதுமே அவன் அம்மா தான். நான் ஏதாவது கேள்வி கேட்டால் கூட சரி, இல்லை என்று இரு பதில்கள் மட்டும் தான் வரும். எந்த ஒரு பேட்டி கோ அல்லது புகைப்படத்திற்கோ வந்து நிற்க மாட்டான்.

அது அவனுக்கு பிடிக்காது. எனது செல்போனில் அவர் புத்தகம் படிக்கும் பொழுதும், பியானோ வாசிக்கும் பொழுதும் தற்செயலாக எடுத்த புகைப்படங்கள் தான் அதிகமாக இருக்கும். அவருக்கு பியானோ மீதான இருக்கும் காதலை கண்டு இளையராஜா மற்றும் ஏ ஆர் ரகுமான் போன்ற ஜாமவான்கள் அவன் நல்ல இசைக் கலைஞனாக வருவான் என்று கூறினார்கள்.

ஆனால் அதற்கு முன்பாகவே அவன் இறந்து விட்டான். அதேபோல அவன் எப்பொழுதும் முத்தம் கொடுக்க அனுமதித்ததே இல்லை. ஏன் அவனது அம்மாவை கூட அதற்கு விட மாட்டான். ஆனால் எனக்கு ஒரே ஒரு முறை அனுமதி கொடுத்தான். அது எப்பொழுது என்றால் அவன் இறந்து அவனை எரிவூட்ட எடுத்து செல்வதற்கு முன்புதான் என்று தொண்டை அடைக்க தனது துக்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.