திருமணம் செய்து கொள்ளாமல் நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை அற்பணித்த அற்புதமான தலைவர்கள்!!

0
254
#image_title

திருமணம் செய்து கொள்ளாமல் நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை அற்பணித்த அற்புதமான தலைவர்கள்!!

நம் நாட்டிற்காகவும்,மக்களுக்காகவும் பல தலைவர்கள் தங்களது வாழ்க்கையை தியாகம் செய்து இருக்கின்றனர்.அந்த வகையில் தேசத்திற்காகவும்,மக்கள் நலனுக்காகவும் திருமணம் செய்து கொள்ளாமல் சிறந்த தலைவர்களாக வாழ்ந்து மறைந்த 5 தலைவர்களின் விவரம் இதோ.

1.காமராஜர்

கடந்த 1903 ஆம் ஆண்டு விருதுநகரில் பிறந்த காமராஜர் அரசியல் ஆர்வத்தால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மக்கள் பணியாற்றினார்.பின்னர் 1953 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்று சத்துணவு திட்டம்,நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,மேட்டூர் காகிதத் தொழிற்சாலை உள்ளிட்ட மக்களுக்கு பயன்பட கூடிய பல திட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள்,அணைகளை கட்டினார்.தன் வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ளாமல் மக்களுக்கு வாழ்ந்த இவர் கடந்த 1975 ஆம் ஆண்டு காலமானார்.அப்பொழுது அவருக்கு வயது 72 ஆகும்.

2.ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

கடந்த 1931 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஆவார்.பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பட்டு நிறுவனத்திலும்,இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் விண்வெளி பொறியாளராக பணியாற்றினார்.விண்வளி துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது.இவரால் இந்திய தேசத்தில் பல முன்னேற்றங்கள் கொண்டு வரப்பட்டது.தன் வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ளாமல் தேசத்திற்காக வாழ்ந்த இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு காலமானார்.அப்பொழுது அவருக்கு வயது 83 ஆகும்.
வாழ்நாளில்

3.முத்துராமலிங்க தேவர்

கடந்த 1908 ஆம் ஆண்டு பிறந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் என்ற இடத்தில் முத்துராமலிங்க தேவர் பிறந்தார்.அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார்.லோக்சபா தேர்தலில் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் தன் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் மக்களுக்காகவே வாழ்ந்த இவர் கடந்த 1963 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார்.அப்பொழுது அவருக்கு வயது 55 ஆகும்.

4.சுவாமி விவேகானந்தர்

கடந்த 1863 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்த சுவாமி விவேகானந்தர் 16 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத்தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார்.சிறந்த பகுத்தறிவளராக திகழ்ந்த இவர் துறவியாக மாறி மக்கள் பணியில் ஈடுபட்டார்.கடந்த 1886 ஆம் ஆண்டு காலமானார்.அப்பொழுது அவருக்கு வயது 39 ஆகும்.

5.அடல் பிகாரி வாஜ்பாய்

கடந்த 1924 ஆம் ஆண்டு பிறந்த மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரில் பிறந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் அரசியல் ஈர்ப்பால் 1939 ஆம் ஆண்டு மக்கள் பணியில் ஈடுபட தொடங்கினார்.கடந்த 1980 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா என்ற பெயரில் கட்சியை தொடங்கிய இவர் 1996 ஆம் ஆண்டு பிரதமர் ஆனார்.வெறும் 13 நாட்கள் மற்றும் பிரதமர் பதவி வகித்தார்.

பின்னர் 1998 முதல் 1999 வரை கிட்டத்தட்ட 13 மாதங்கள் மற்றும் அதனை தொடர்ந்து 1999 முதல் 2004 வரை இந்திய பிரதமராக பதவி வகித்தார்.9 முறை மக்களவைக்கும்,2 முறை மாநிலங்களவைக்கும் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.மக்கள் பணிக்காக தன் வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த இவர் உடல்நலக் குறைவால் கடந்த 2018 ஆம் ஆண்டு காலமானார்.அப்பொழுது அவருக்கு வயது 93 ஆகும்.

Previous articleயூடியூபர் இயக்கும் நயன்தாரா அவர்களின் திரைப்படம்!!! இணையத்தில் டைட்டில் லுக் போஸ்டர் வைரல்!!!
Next articleஜியோ நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இன்டர்நெட் சேவை!!! நாளை அறாமுகமாகின்றது என்று ஜியோ அறிவிப்பு!!!