உங்களுக்கு தீராத தொண்டை வலி இருக்கின்றதா!!? அப்போது அதை குணப்படுத்தும் சில எளிய முறைகள் இதோ!!!
நம்மில் சிலருக்கு இருக்கும் தீராத தொண்டை வலியை குணப்படுத்த உதவும் சில எளிமையான வீட்டு வைத்திய முறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.
நமக்கு தொண்டை வலி என்பது பல காரணங்களால் ஏற்படுகின்றது. நமக்கு தொண்டை வலி ஏற்படுவதற்கு அழற்சி, இன்ஃபிளமேஷன்கள், பாக்டீரியா தொற்று, தொற்று நோய் கிருமிகள் ஆகியவை காரணங்களாக சொல்லப்படுகின்றது.
நமக்கு இருமல் இருந்தாலோ அல்லது காய்ச்சல் இருந்தாலோ நமது தொண்டையில் வலி ஏற்படும். நமது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும் தொண்டையில் வலி ஏற்படும். இந்த தொண்டை வலியை குணப்படுத்த உதவும் சில எளிமையான வீட்டு வைத்திய முறைகளை பற்றி பார்க்கலாம்.
தொண்டை வலியை குணப்படுத்த உதவும் டிப்ஸ்…
* சிறிது இலவங்கப்பட்டை தூள் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலந்து அதை சாப்பிட வேண்டும். தேன் மற்றும் இலவங்கப்பட்டை தூள் தொண்டையில் ஏற்படும் தொற்றுகளை சரி செய்யும்.
* எலுமிச்சை சாறு எடுத்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தொண்டையில்படும் படி மெதுவாக குடிக்க வேண்டும்.
* தொண்டை வலி ஏற்பட்டால் காலம்காலமாக பயன்படுத்தும் மஞ்சள் பால் தயார் செய்து குடிக்கலாம். அதாவது ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாம்.
* தொண்டை வலியை சரி செய்வதற்கு ஹெர்பல் டீ குடிக்கலாம்.
* தொண்டை வலி இருக்கும் பொழுது ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் உப்பு கலந்து 30 நொடிகள் வாய் கொப்பளிக்க வேண்டும்.