புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது? காரணம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!!

0
106
#image_title

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது? காரணம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!!

நம் முன்னோர்கள் காரணமின்றி எதையும் சொல்ல மாட்டார்கள்.அவர்கள் வழியில் நாம் பின் தொடர்ந்தால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
தமிழ் மாதங்களில் புனிதமான மாதங்களுள் ஒன்றாக கருதப்படும் புரட்டாசி பெருமாளை வணங்க உகந்த மாதம் ஆகும்.

இந்த மாதத்தில் பலர் அசைவம் உண்ண மாட்டார்கள்.காரணம் என்ன என்று தெரியாமல் நாமும் காலம் காலமாக இதனை கடைபிடித்து வருகிறோம்.இதற்கு உண்மையான அறிவியல் என்ன தெரிந்தால் உண்மையில் ஆச்சரியப்படுவீர்கள்.நம் முன்னோர்கள் எவ்வளவு அறிவு சிந்தனை பெற்றுள்ளார்கள் என்பதை நினைக்கும் பொழுது பெருமையாகத்தான் இருக்கிறது.

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது?

புரட்டாசி மாதம் பெருமாளை வணங்க உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது.இந்த மாதத்தில் அசைவத்தை தவிர்த்து, துளசி தீர்த்தம் அருந்த வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
வருடத்தில் பொதுவாக புரட்டாசி மாதத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.இந்த மாதத்தில் இதுவரை இல்லாத அளவு பூமி வெயிலால் வெப்ப மடைந்து இருக்கும்.இதனால் மழை வரும் போது, அதை ஈர்த்து வெப்பத்தை குறைத்து பூமி தன்னுள் இருக்கும் சூட்டை வெளியேற்றுவதால் புரட்டாசி மாதம் நமக்கு சூட்டை கிளப்பி விடும் மாதமாக பார்க்கப்படுகிறது.
இந்த சூடு கோடை காலத்தை காட்டிலும் அதிகப்படியாக இருக்கும் என்றும் இதனால் மனிதர்களுக்கு மோசமான நிலை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.இதனால் தான் இந்த புரட்டாசி மாதத்தில் நான்-வெஜ் சாப்பிட கூடாது என்று சொல்லப்படுகிறது.

இந்த மாதத்தில் பூமியின் சூடு அதிகம் இருக்கும் என்பதால் தான் பெருமாளை கோவிலுக்கு சென்று அங்கு தரும் துளசி தீர்த்தத்தை பருக வேண்டுமென்று முன்னோர்கள் ஆன்மீகம் மற்றும் அறிவியல் பூர்வமாக நமக்கு சொல்லி இருக்கின்றனர்.