உங்கள் வீட்டில் அலுமினிய பாத்திரங்கள் வைத்திருந்தால் இப்பொழுதே தூக்கி வீசுங்கள்!!

0
223
#image_title

உங்கள் வீட்டில் அலுமினிய பாத்திரங்கள் வைத்திருந்தால் இப்பொழுதே தூக்கி வீசுங்கள்!!

பால் காய்ச்சும் பாத்திரத்தில் தொடங்கி குக்கர்,வாணலி,சாதம்,குழம்பு செய்வது என்று அலுமினிய பாத்திரங்களின் ஆதிக்கம் வீடுகளில் அதிகரித்து விட்டது.இவை விலை மலிவாகவும்,எடை குறைந்தும் காணப்படுவதினால் மக்கள் விரும்பும் பொருட்களில் ஒன்றாக இருக்கிறது.இந்த பாத்திரங்கள் விறகு அடுப்பு,கேஸ் அடுப்பு என்று அனைத்திலும் சமைக்க சவுகரியமாக இருப்பதினால் அனைவரின் வீடுகளிலும் அத்தியாவசிய பொருட்களாக இவை மாறிவிட்டது.

அலுமினிய பாத்திரத்தில் புளி,எலுமிச்சை,வினிகர்,தக்காளி உள்ளிட்ட புளிப்பு சுவை கொண்ட சேர்த்து சமைக்கும் பொழுதுதான் மனித உடலுக்கு இவை பேராபத்தாக மாறி விடுகிறது.சொல்லப்போனால் ஸ்லோ பாய்சனாக இவை மெல்ல மெல்ல மனித உடலில் சேர்த்து பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்த தொடங்குகிறது.நம் உடலுக்குள் சென்று தேங்கும் அலுமியம் அதிகளவு உப்பை உற்பத்தி செய்கிறது.

இதனால் கிட்னி செயலிழப்பு ஏற்படும் அபாய நிலைக்கு நாம் சென்று விடுவோம்.அதோடு கல்லீரல்,தலைவலி,எலும்பு மென்மையாக்குதல்,குடல் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துதல்,முடி உதிர்தல்,தேம்பல் உள்ளிட்ட பாதிப்புகளும் குழந்தைகளுக்கு நியாப சக்தி,நினைவாற்றல் குறைபாடும் ஏற்படும் என்பதினால் இந்த அலுமினிய பாத்திர பயன்பாட்டை குறைத்து கொள்வது நல்லது.முற்றிலும் உபயோகிப்பதை தவிர்த்தால் அதை விட நல்லது.

இந்த பாத்திரங்களில் சமைத்து பழகி விட்டதால் அவற்றின் பயன்பாட்டை குறைப்பது சற்று கடினம் தான்.அதனால் அலுமினிய பாத்திரத்தில் சமைத்த உடன் அவற்றை ஒரு மண் பாத்திரம் அல்லது கண்ணாடி பாத்திரத்திற்கு மாற்றிவிடுவது நல்லது.மற்றொரு வழி அலுமினிய பாத்திரங்களுக்கு பதில் “அனோடைஸ்” செய்யப்பட்ட அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்துவது உடலுக்கு சற்று பாதுகாப்பானது என்று சொல்லப்படுகிறது.