செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்? மற்றும் எவையெல்லேம் செய்யக்கூடாது? என்பது குறித்த அற்புத தகவல்!!

0
167
#image_title

செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்? மற்றும் எவையெல்லேம் செய்யக்கூடாது? என்பது குறித்த அற்புத தகவல்!!

வாரத்தில் உள்ள 7 நாட்களும் நல்ல நாட்கள் தான்.ஒவ்வொரு கிழமையும் வெவ்வேறு பலன்களை கொண்டவைகளாக இருக்கிறது.வெள்ளி கிழமை என்றால் மங்களகரமான நாள் என்றும் செவ்வாய் என்றால் அபசகுமான நாள் என்பது போன்றெல்லாம் இல்லை.நம்மில் பலர் செவ்வாய் கிழமை எந்த ஒரு காரியத்தையும் செய்ய கூடாது.தொட்டவை துளங்காது என்ற சகுனம் பார்த்து வருகிறோம்.சொல்லப்போனால் செய்வாய் கிழமையில் தொட்ட காரியம் துலங்கும் மங்களகரமான நாள் ஆகும்.

செவ்வாய் கிழமை செய்ய வேண்டியதும்,செய்ய கூடாததும்:-

*நவ கிரகங்களில் மிக சிறந்த கிரகம் செவ்வாய்.இந்த கிரகத்தினை மங்களகாரகன் என்று அழைப்பதில் சுப காரியங்களை செய்ய உகந்த நாளாக இருக்கிறது என்பது பொருள்.இந்த செவ்வாய் கிழமை முருக கடவுளுக்கும் அம்மனுக்கும் மிகவும் உரித்தான நாள் ஆகும்.

*தோஷங்கள் நீங்கி நன்றாக வாழ செவ்வாய் கிழமை முருக கடவுளை நெய் விளக்கு வைத்து வழிபடுவது நல்லது.இதனால் திருமண தோஷம் நீங்கும்.

*ஒருவர் வீடு கட்ட வேண்டுமென்றால் செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருக்க வேண்டும்.

*நம்மில் பலர் பொருட்கள் வாங்குவதில் இருந்து ஒரு வேலையை தொடங்குவது வரை அனைத்திற்கும் நாள் கிழமை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.இதையெல்லாம் நம்பாதவர்களும் இருக்கிறார்கள்.வாரத்தில் 7 கிழமைகளும் நல்ல காரியங்கள் செய்ய உகந்தவை தான்.இருந்த போதிலும் பிரதமை,அஷ்டமி,நவமி உள்ளிட்ட திதியில் எந்த ஒரு சுப காரியத்தையும் செய்ய கூடாது.

*யார் ஒருவர் செவ்வாய் கிழமையில் விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும்.

*செவ்வாய் கிழமையில் எந்த ஒரு பேச்சு வார்த்தையும்,விவாதமும் நடத்த கூடாது.ஒருவேளை அன்று தொடங்கினால் அவை உங்களுக்கு வெற்றியை தேடி தராது.

*செவ்வாய் கிழமையில் வாங்கிய கடனை கொடுப்பதினால் மீண்டும் கடன் வாங்கும் வாய்ப்புகள் நமக்கு அமையாது.

*செவ்வாய் தோஷம் இருபவர்கள் செய்வாய் கிழமையில் பரிகாரம் செய்தால் அருமையான பலன் கிடைக்கும்.

*செவ்வாய் கிழமையில் நகம் வெட்டுதல்,முடி கட் பண்ணுதல்,சேவிங் செய்தல் போன்றவற்றை செய்தல் கூடாது.

*செவ்வாய் தோஷம் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் சொல்லி அங்காரகனை வழிபடுவதால் நல்ல பலன் உண்டாகும்.

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்