புரட்டாசியை “பெருமாள் மாதம்” என்று அழைக்க காரணம் இதுதான்!!
தமிழ் மாதங்களில் சித்திரை முதல் தை வரை அனைத்தும் சிறப்பான மாதங்கள் தான்.ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுவது போல் புரட்டாசி மாதம் பெருமாள் மாதம் சொல்லப்படுகிறது.நவ கிரகங்களில் மிக சிறப்பு வாய்ந்த கிரகம் புதன்.இந்த புதன் கிரகத்தை அதிபதியாக கொண்டிருப்பவர் மகா விஷ்ணு.அதோடு புரட்டாசி புதனுக்கு உரிய மாதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.
புதனுக்கு அதிபதியாக மகா விஷ்ணு இருப்பதினால் தான் நம் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்குகிறோம்.இவ்வாறு செய்வதன் மூலம் புதனின் அருளையும் சேர்த்து பெற மமுடியும்.அதே சமயம் புதனுக்கு நட்பானவர் சனி பகவான் என்பதினால் பெருமாளை வழிபடுவதனால் சனி பகவான் நமக்கு கெடுதல் செய்ய மாட்டார்.
உலகெங்கும் உள்ள பெருமாள் கோவில்களில் இந்த புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள்,அன்னதானங்கள் நடைபெறும்.இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வதால் பெருமாளின் அருள் எப்பவும் நமக்கு இருக்கும்.சனிக்கிழமை மட்டுமின்றி திங்கள்,புதன் உள்ளிட்ட கிழமைகளும் பெருமாளை வழிபட உகந்த நாள்.
இந்த புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமை நாட்களில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது பல நமைகளை நமக்கு அள்ளி கொடுக்கும்.பெருமாள் கோவிலில் தரும் துளசி தீர்த்தம் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பது தனி சிறப்பு.
இந்த மாதத்தின் இறுதி வார வெள்ளிக்கிழமை நாளில் பெருமாளுக்கும் ஸ்ரீதேவி,பூதேவி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபோகம் நடைபெறுவது வழக்கம்.இந்த வைபோகத்தில் கலந்து கொண்டு பெருமாள் ஆசி பெறுவதினால் வாழ்க்கையில் சுப நிகழ்வுகள் அதிகம் உண்டாகும்.
புரட்டாசி மாதம் வழிபாட்டு மாதம் என்பதினால் இந்து குடும்பத்தினர் இந்த மாதத்தில் திருமணம்,வீடு கட்ட வாஸ்து பூஜை,கிரகப்பிரவேசம் உள்ளிட்டவற்றை செய்ய மாட்டார்கள்.