அம்மா உணவகங்களில் சாப்பாடு இலவசம்! சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு!

0
119

அம்மா உணவகங்களில் சாப்பாடு இலவசம்! சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு!

ஊரடங்கு உத்தரவால் உணவு பாதிப்பை தடுக்க சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளி, முக கவசம், தினசரி கைகளை சோப்பு போட்டு கழுவுதல் மற்றும் உங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுதல். மேலும் அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இதனால் வேலை மற்றும் வருமானம் இல்லாத தினக்கூலிகள், கட்டுமான தொழிலாளர்கள், அமைப்புசாரா ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் உணவுக்கே பெரிதும் பாதித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் போன்றோர் மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். இப்படி வழங்குவதன் மூலமாக கொரோனா தொற்ற பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இதற்கு கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி வகுத்துள்ளது.

மேலும் ஊரடங்கால் பலர் உணவிற்கு தவிக்கும் ஆபத்தான சூழலை கருத்தில் கொண்டு சென்னையில் இயங்கும் அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்குமாறு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இது மக்களிடையே ஓரளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு பலரது பசியை போக்கும் வழிமுறையாக பார்க்கப்படுகிறது. இந்த இலவச உணவுமுறை ஊரடங்கு முடியும் வரை செயல்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Previous articleஆபத்தில் உதவிய ரஜினிகாந்த்.! 1500 பேருக்கு அத்தியாவசிய பொருளுதவி.!! இயக்குனர்கள் சங்கம் பாராட்டு
Next articleமருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை! அமலுக்கு வந்த அவசர சட்டம்.!!