தினமும் கிரீம் பிஸ்கட் சாப்பிடுபவர்களா நீங்கள்!!! அப்போ உங்களுக்கு இந்த 4 பிரச்சனைகள் ஏற்படும்!!! 

0
111
#image_title

தினமும் கிரீம் பிஸ்கட் சாப்பிடுபவர்களா நீங்கள்!!! அப்போ உங்களுக்கு இந்த 4 பிரச்சனைகள் ஏற்படும்!!!

தினமும் கிரீம் பிஸ்கட் சாப்பிடுவதால் நம் உடலுக்கு முக்கியமான 4 பாதிப்புகள் ஏற்படுகின்றது. அது என்னென்ன பாதிப்புகள் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

பிஸ்கட் பொதுவாக மைதா மாவில் செய்யப்படும் ஒரு உணவு பொருள் ஆகும். இந்த பிஸ்கட்டை அதிகமாக சாப்பிடும் பொழுது பல பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் சிலர் ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் கிரீம் பிஸ்கட் வகைகளை சாப்பிடுவார்கள். அதிலும் குழந்தைகள் தான் கிரீம் பிஸ்கட்டை அதிகம் உட்கொள்ளும் நபர்களாக இருக்கின்றனர்.

இந்த கிரீம் பிஸ்கட்டில் நம் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய இரண்டு பொருட்கள் உள்ளன. ஒன்று பியூட்டிலேட்டட் ஹைட்ராக்சியானிசோல் மற்றொன்று பியூட்டிலேட்டட் ஹைட்ராக்சிடோலுயீன். இந்த இரண்டு பொருட்களும் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் ஆகும்.

முன்பு கூறியதை போல பிஸ்கட் மைதா மாவினால் தயாரிக்கப்படுகின்றது. மைதா நம் உடலுக்கு பல நோய்களை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக இருக்கின்றது. இந்நிலையில் மேற்கூறிய பியூட்டிலேட்டட் ஹைட்ராக்சிடோலுயீன் மற்றும் பியூட்டிலேட்டட் ஹைட்ராக்சியானிசோல் ஆகிய பொருள்கள் சேரும்பொழுது உடல் மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தி விடுகின்றது. இந்த கிரீம் பிஸ்கட் தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் 4 முக்கிய பாதிப்புகள் பற்றி பார்க்கலாம்.

கிரீம் பிஸ்கட் தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நான்கு முக்கிய பாதிப்புகள்!!!

* இந்த கிரீம் பிஸ்கட்டை தொடர்ந்து அதிகமாக சாப்பிடும் பொழுது நமக்கு மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தி விடுகின்றது.

* தொடர்ந்து அதிகமாக கிரீம் பிஸ்கட் சாப்பிடும் பொழுது நமக்கு செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றது.

* கிரீம் பிஸ்கெட் வகைகளில் கலோரிகள் அதிகமாக இருக்கின்றது. இதனால் இதை தவிர்த்து அதிகமாக சாப்பிட்டு வரும் பொழுது உடல் எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்கும்.

* இந்த கிரீம் பிஸ்கட்டுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கின்றது. இதனால் இதை தொடர்த்து சாப்பிடும் பொழுது இதய நோய் கூட ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றது.

 

Previous articleவீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க! நல்ல தீர்வு கிடைக்கும்! அனுபவ உண்மை!
Next articleதினமும் ஒரு பேரிச்சை உண்பதால் உடலுக்கு 5 வித நன்மைகள் கிடைக்கும்!!