நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சதம் அடித்த மொஹம்மது ரிஷ்வான்!!! 346 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!!!

0
85
#image_title

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சதம் அடித்த மொஹம்மது ரிஷ்வான்!!! 346 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் மொஹம்மது ரிஷ்வான் அவர்கள் சதம் அடித்து 103 ரன்கள் சேர்த்துள்ளார். மேலும் இங்கிலாந்து அணிக்கு ரன்கள் வெற்றி இலக்காக 346 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று(செப்டம்பர்29) தொடங்கிய உலகக் கோப்பை தொடரின் பயிற்சி போட்டிகளில் நியூசிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 1 ரன்னிலும், அப்துல்லா ஷபிக் 14 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அதன் பின்னர் ஜாடி சேர்ந்த பாபர் அசம், மொஹம்மது ரிஷ்வான் இணை வழக்கம் போல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து விளையாடிய பாபர் அசம் அரைசதம் அடித்து 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து விளையாடிய மொஹம்மது ரிஷ்வான் சதம் அடித்தார். சிறப்பாக விளையாடிய மொஹம்மது ரிஷ்வான் 94 பந்துகளில் சதம் அடித்தார். 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உள்பட 103 ரன்கள் சேர்த்து ரிட்டையர்ட் அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு வீரர் சவுத் சகீல் அரைசதம் அடித்து 75 ரன்கள் சேர்த்தார்.

இதனால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் மிட்செல் சேன்டினர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து நியூசிலாந்து அணிக்கு 346 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Previous articleஅயலானுடன் மோதும் அரண்மனை4!!! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள படக்குழு!!!
Next article2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி வடக்குபட்டு கிராமத்தில் நிறைவடைந்தது!!!