தமிழகத்தில்அக்டோபர் 5 வரை மழை இருக்கும்!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!
ஒரே நேரத்தில் வங்கக் கடல் பகுதியிலும், அரபிக் கடல் பகுதியிலும் இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 5ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை படிப்படியக விலகத் தொடங்கிய இருக்கின்றது. இந்நிலையில் அடுத்து வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. அது மட்டுமில்லாமல் அரபிக்கடல் மற்றும் வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் “கிழக்கு மத்திய கடல் பகுதியில் கோவா மற்றும் கொங்கன் பகுதியை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கின்றது. கிழக்கு மத்திய கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுபெற்று அதே இடத்தில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அரபிக்கடல் போலவே வடகிழக்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கின்றது. இது வலுவடைந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் கரையோரப் பகுதிகளை நோக்கி நகரும்” என்று அறிக்கை வெளியாகி உள்ளது.
மேலும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் அவர்கள் இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழகத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் உள்ள தென்மேற்கு வங்கக் கடலில் புதிதாக மேலுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இதனால் தான். தற்பொழுது தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 5ம் தேதி வரை ஒரு. சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். மத்திய வடக்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகள் ஆகிய பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூரைக்காற்றானது வீசும்.
மேலும் கேரளா, லட்சத் தீவு, கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் ஆகிய பகுதிகளிலும் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். எனவே மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றது” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.