என்றுமே இளமையாக இருக்க வேண்டுமா!!? இதோ அதற்கான சில டிப்ஸ்!!!

0
75
#image_title

என்றுமே இளமையாக இருக்க வேண்டுமா!!? இதோ அதற்கான சில டிப்ஸ்!!!

நாம் என்றுமே இளமையாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் எதை சாப்பிட வேண்டும் என்பது பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு அதை பின்பற்றி என்றுமே இளமையாக இருக்காலம்.

இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நடிகர்கள், நடிகைகள் அனைவரும் இளமையாகத்தான் இருப்பார்கள். 50 வயது 60 வயது ஆனாலும் நாம் சிறு வயதில் பார்த்த தோற்றத்துடனே சில நடிகர்கள், நடிகைகள் அனைவரும் இருப்பார்கள். நாம் நினைத்துக் கொள்கிறோம் அவர்கள் எல்லாரும் மேக்கப் பயன்படுத்துவதால் இன்றும் இளமையாக இருக்கிறார்கள் என்று. ஆனால் அது உண்மை அல்ல. மேக்கப் ஒரு புறம் இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தேவையான வழிமுறைகளை பின்பற்றி வருகிறார்கள்.

நாமும் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்றால் உடல் ஆரோக்கியம் முக்கியம். சரியான உணவு முறையை பின்பற்றி வருபவர்தளால் மட்டுமே ஒருவரால் என்றுமே இளமை தோற்றத்தை பெற முடியும். அந்த வகையில் என்றுமேஇளமை மாறாமல் இருக்க நாம் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து அடுத்து பார்க்கலாம்.

என்றுமே இளமையாக இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!!!

* நாம் என்றுமே இளமையாக இருக்க வேண்டும் என்றால் பச்சை இலை காய்கறிகளை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். ஆன்டி ஆக்சிடன்கள் நிறைந்த இந்த பச்சை இலை காய்கறிகள் நம்முடைய உடலில் இருக்கும் செல்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கின்றது.

* ஆரோக்கியமான எண்ணெய் வகைகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் இது போன்ற உடலுக்கு நன்மை தரக்கூடிய எண்ணெய் வகைகள் இருக்கின்றது.

* என்றுமே இளமையாக இருக்க வேண்டும் என்றால் நாம் தொடர்ந்து பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை சாப்பிட வேண்டும்.

* நாம் இளமையாக இருக்க வேண்டும் என்றால் நட்ஸ் வகைகளை சாப்பிட வேண்டும். மேலும் நட்ஸ் வகைகளை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த முடியும்.

* புளித்த உணவு வகைகளை சாப்பிட்டு வர வேண்டும். இதுவும் நம்மை என்றுமே இளமையாக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.

* வெயிலில் செல்லும் பொழுது சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. இது சருமத்தை வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.

Previous articleஇளம் வயது வழுக்கை பிரச்சனையில் இருந்து விடுபட இந்த ஸ்ப்ரே பயன்படுத்துங்கள் போதும்!!
Next articleகமகமக்கும் “குழம்பு மிளகாய் தூள்” இனி வீட்டிலேயே செய்யலாம்!! 40 வகை குழம்பிற்கு இந்த ஒரு பொடி போதும்!!