பாண்டிச்சேரியில் இறைவன் படம் பார்க்க வந்த 5 ரசிகர்கள்!!! திருப்பி அனுப்பிய தியேட்டர் நிர்வாகம்!!!

0
200
#image_title

பாண்டிச்சேரியில் இறைவன் படம் பார்க்க வந்த 5 ரசிகர்கள்!!! திருப்பி அனுப்பிய தியேட்டர் நிர்வாகம்!!!

பாண்டிசேரியில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன் திரைப்படத்தை பார்க்க வெறும் 5 ரசிகர்கள் மட்டுமே வந்ததால் தியேட்டர் நிர்வாகம் 5 ரசிகர்களையும் திருப்பி அனுப்பியுள்ளது. இது தொடர்பான ரசிகர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

இயக்குநர் அஹமத் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 28ம் தேதி வெளியானது. சேக்கை திரில்லர் திரைப்படமாக உருவாகிய இந்த திரைப்படத்தின் டிரெய்லர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த நிலையில் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று விமர்சனம் செய்யப்பட்டது. இந்நிலையில் பாண்டிச்சேரியில் இறைவன் திரைப்படம் பார்க்க வந்த 5 ரசிகர்களை தியேட்டர் நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளது.

பாண்டிச்சேரியில் உள்ள முருகா தியேட்டரில் இறைவன் திரைப்படம் ஓடி வருகின்றது. இந்த தியேட்டரில் இறைவன் திரைப்படம் பார்க்க டிக்கெட் எடுத்துக் கொண்டு 5 ரசிகர்கள் படம் பார்க்க வந்தனர். வெறும் 5 ரசிகர்களுக்காக திரைப்படம் ஓட்ட முடியாது என்று தியேட்டர் நிர்வாகம் அந்த ரசிகர்களை திருப்பி அனுப்பி உள்ளது. இதை ஒரு ரசிகர் சமூக வலைதளத்தில் இறைவன் திரைப்படத்திற்கு எடுத்த டிக்கெட்டை காட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அந்த ரசிகர் “இறைவன் திரைப்படம் பார்ப்பதற்காக நாங்கள் இன்று(அக்டோபர்4) இரவு 9.30 மணி காட்சிக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு வந்தோம். ஆனால் தியேட்டரில் வெறும் 5 பேர் மட்டும் இருந்ததால் திரைப்படம் ஓட்ட முடியாது என்று கூறி வருபவர்களிடம் டிக்கெட்டை பெற்றுக்கொண்டு டிக்கெட்டுக்கான தொகையை செலுத்தி திருப்பி அனுப்பி விடுகின்றது. தினமும் 5 பேருக்கு படத்தை ஓட்டினால் எங்களுக்கு நஷ்டம் தான் ஏற்படுகின்றது என்று தியேட்டர் நிர்வாகம் கூறுகின்றது. இது தான் நண்பர்களே தற்போதைய காலத்தில் தமிழ் சினிமாவின் நிலைமை” என்று வீடியோ பதிவு செய்து பகிர்ந்துள்ளார். இவருடைய இந்த வீடியோவில் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

Previous articleஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய பவன் கல்யாண்!!! பாஜக கட்சியின் நிலைமை என்னவாகும்!!?
Next articleஎஸ்.ஜே சூரியாவுக்கு இருக்கும் பிரச்சனை பிக்பாஸ் பிரதீப்புக்கும் இருக்கின்றது!!! வெளியான அதிர்ச்சி தகவல்!!!