இந்த வடை செய்ய சில நிமிடங்கள் போதும்!! இன்றே முயற்சித்து பாருங்கள்!!
நம் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று வடை.இதில் உளுந்து கொண்டு செய்யப்படும் மெதுவடை,உளுந்து வடை,அதேபோல் வாழைப்பூ வடை,கிழங்கு வடை,மசால் வடை என்று பல வகைகள் இருக்கிறது.இந்த வடைகளை செய்ய அதிக நேரம் எடுத்து கொள்வதால் பலரும் இதை செய்து சாப்பிட சலித்து கொள்கிறார்கள்.அனால் நான் சொல்லும் முறையில் வடை செய்ய வெறும் 20 நிமிடங்கள் தான் ஆகும்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறைப்படி செய்து பாருங்கள் வடை மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
அவல் – 1 கப்
*பச்சரிசி மாவு – 4 தேக்கரண்டி
*ரவை – 2 தேக்கரண்டி
*பெரிய வெங்காயம் – 1
*பச்சை மிளகாய் – 2(நறுக்கியது)
*கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி அளவு
*கருவேப்பிலை – 2 கொத்து
*இஞ்சி – சிறு துண்டு
*உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து கொள்ளவும்.அதில் அவல் 1 கப் சேர்த்து 3 முதல் 4 முறை தண்ணீர் ஊற்றி அவலை நன்கு சுத்தம் செய்யவும்.பின்னர் அவல் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வரை ஊற விடவும்.
பின்னர் அவல் நன்கு ஊறி வந்த பின் தண்ணீரில் இருந்து அவலை தனியாக எடுத்து நன்கு பிழிந்து ஒரு பாத்திரத்தில் போடவும்.அதில் பச்சரிசி மாவு 4 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கவும்.
அதன் பின் ரவை 1 கப் அளவு எடுத்து அதில் சேர்க்கவும்.பிறகு தேவையான அளவு தூள் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
தொடர்ந்து பொடி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்,நறுக்கிய பச்சை மிளகாய்,சிறு துண்டு இஞ்சி,நறுக்கிய கொத்தமல்லி இலைகள்,கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மீண்டும் நன்கு பிசைந்து கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் வடையை பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.அவை சூடேறியதும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு உள்ளங்கையில் தண்ணீரை தொட்டுக் கொண்டு தயார் செய்து வைத்துள்ள மாவை வடை போல் தட்டி எண்ணெயில் போடவும்.பின்னர் இரு புறமும் நன்றாக சிவக்க விட்டு வடை வெந்ததும் எடுத்து ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.