செலவு குறைவு.. வரவு அதிகம்.. என்றவாறு வாழ்வில் நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!

0
74
#image_title

செலவு குறைவு.. வரவு அதிகம்.. என்றவாறு வாழ்வில் நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!

இன்றைய உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் ஏதோ ஒரு வழியில் அவை செலவாகி விடுகிறது என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் சில வழி முறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.

வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி பண வரவு அதிகரிக்க வீட்டு பூஜை அறையில் தினமும் லட்சுமி குபேர விளக்கேற்றி வழிபட வேண்டும்.இப்படி செய்வதால் நமக்கு ஏற்படும் செலவுகள் குறைந்து வரவு அதிகரிக்கும்.

பண வரவு அதிகரிக்க லட்சுமி குபேர விளக்கேற்றும் முறை:-

வீட்டில் லட்சுமி குபேர விளக்கு ஏற்றி வைத்தால் நம்மை நோக்கி எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் அதை எதிரித்து துணிந்து போராடும் மன தைரியம் நம்மில் பிறக்கும் என்பது ஐதீகம்.

முதலில் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் பூஜை அறையில் உள்ள லட்சுமி குபேர விளக்கில் தீப எண்ணெய் ஊற்றி அதில் செல்வதை பெருக்கும் குபேர நாணயம் போடவும்.பின்னர் லட்சுமி தாயாருக்கு பிடித்த வாசனை நிறைந்த பொருட்களில் ஒன்றான ஏலக்காய் விதைகளை அதில் சேர்த்து கொள்ளவும்.அடுத்து விளக்கு திரி ஒன்றை அதில் வைக்கவும்.

அடுத்து எச்சில் படாத பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் சுத்தமான தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் வாசனை நிறைந்த பன்னீர் ஊற்றி அதில் பூஜைக்கு பயன்படுத்தும் பூக்களில் ஏதேனும் ஒரு வகையை அதில் போடவும்.

பின்னர் செல்வத்தை அள்ளி தரும் மகாலட்சுமி தாயாரையும்,குபேரரையும் மனதில் நினைத்து லட்சுமி குபேர விளக்கை ஏற்றவும்.இந்த விளக்கை அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றி வழிபட வேண்டும்.
.
இந்த விளக்கை தினமும் ஏற்ற முடியாத பட்சத்தில் குபேரருக்கு உகந்த நாளான வியாழக்கிழமை அல்லது லட்சுமி தாயாருக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் லட்சுமி குபேர விளக்கை ஏற்றி வழிபட்டால் வீட்டில் செலவு குறைந்து வரவு அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

Previous articleஉடலுக்கு ஆரோக்கியத்தை வாரி வழங்கும் “வேர்க்கடலை லட்டு”!! இப்படி செய்தால் அதிக ருசியாக இருக்கும்!!
Next article1 மணி நேரத்தில் 100 சிறுநீரக கற்களை வெளியேற்ற வேண்டுமா? அப்போ இந்த அற்புத பானத்தை பருங்குங்கள்!! 100% அனுபவ உண்மை!