உடலுக்கு ஆரோக்கியத்தை வாரி வழங்கும் “வேர்க்கடலை லட்டு”!! இப்படி செய்தால் அதிக ருசியாக இருக்கும்!!

0
27
#image_title

உடலுக்கு ஆரோக்கியத்தை வாரி வழங்கும் “வேர்க்கடலை லட்டு”!! இப்படி செய்தால் அதிக ருசியாக இருக்கும்!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த இனிப்பு பண்டமாக வேர்க்கடலையை வைத்து செய்யும் பொருட்கள் இருக்கிறது.வேர்க்கடலையில் அதிகளவு வைட்டமின்கள் பி1,பி3, பி9 மற்றும் ஈ,மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.

அதேபோல் புரதச் சத்து,இரும்பு மற்றும் செலினியம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இந்த வேர்க்கடலை உடலின் சக்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு தசைகளை உறுதியாக வைக்க உதவுகிறது.இது மூளைகளின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதோடு உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை அகற்றுகிறது.அத்தோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. இவ்வளவு நன்மைகள் கொண்ட வேர்க்கடலை லட்டு சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*வேர்கடலை – 1 கப்

*வெல்லத்தூள் – 150 கிராம்

*நெய் – 1 1/2 ஸ்பூன்

*முந்திரி பருப்பு – 10

செய்முறை:-

1.அடுப்பு பற்றவைத்து வேர்க்கடலை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பின்னர் அதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.அடுத்து கடாயில் 1 1/2 தேக்கரண்டி நெய் ஊற்றி அவை சூடேறியதும் அதில் முந்திரி பருப்பு போட்டு வறுத்து கொள்ளவும்.பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

2.ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

3.பின்னர் அதில் வெல்லத்தூள் 150 கிராம் சேர்த்து நன்கு தூள் செய்து கொள்ளவும்.

4.இதை ஒரு தட்டில் கொட்டி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.