மேடையில் எம்ஜிஆரை விமர்சனம் செய்த கண்ணதாசன் – ஆனால்.. எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா?

0
87
#image_title

மேடையில் எம்ஜிஆரை விமர்சனம் செய்த கண்ணதாசன் – ஆனால்… எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா?

தமிழ் சினிமாவில், பிரபல பாடலாசிரியரும், கவிஞராகவும் வலம் வந்தவர் கண்ணதாசன். அன்று முதல் இன்று வரை இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை இவர் எழுதியுள்ளார். இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும், கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.

பல தேசிய விருதுகளை வாங்கி குவித்தவர் கண்ணதாசன். 1980ம் ஆண்டே இவர் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். எத்தனை வருடங்கள் கழிந்தாலும் இன்று வரை இவருடைய பாடல்கள் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

1950-1960ம் ஆண்டுகளில் கொடி கட்டி பறந்த எம்.ஜி.ஆர், சிவாஜி உள்பட பல நடிகர்களுக்கும் இவர் பல பாடல்களை எழுதினார்.

தமிழ் சினிமாவில் கண்ணதாசன் தான் எம்.ஜி.ஆருக்கு அதிகப்படியான பாடல்களை எழுதினார். இவரைப்போலவே வாலியும் எம்ஜிஆருக்கு பாடல் எழுதினார்.

ஆரம்பத்தில் கண்ணதாசன் மட்டும்தான் எம்.ஜி.ஆர் படங்களில் பாடல்களை எழுதி வந்தார். ஒரு கட்டத்தில் எம்ஜிஆருக்கும், கண்ணதாசனுக்கும் சிறிதாக மனக்கசப்பு வந்தது. அரசியல் காரணமாக மேடைகளில் எம்.ஜி.ஆரை கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதனால் கடுப்பான எம்ஜிஆர், வாலியை வைத்து தனது படங்களில் பாடல்களை எழுத வைத்தார். சில வருடங்களாக எம்.ஜி.ஆரும் கண்ணதாசனும் பேசவே இல்லை. முகராசி படத்தில் வாலி எழுதிய பாடல் தேவருக்கு பிடிக்கவில்லை. இதனால், எம்.ஜி.ஆரிடம் சென்று இதை சொல்லி ‘கண்ணதாசனை எழுத வைக்கலாமா?’ என்று கேட்டுள்ளார்.

அப்போது, எம்.ஜி.ஆரும் சம்மதம் சொல்ல, ‘உண்டாக்கி விட்டர்கள் ரெண்டு பேரு.. இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு’ என்ற பாடலை கண்ணதாசன் எழுதினாராம். அந்தப் பாடல் எம்.ஜி.ஆருக்கு ரொம்ப பிடித்துவிட்டதாம்.

Previous articleசிவாஜியின் தில்லானா மோகனாம்பாள் படத்தில் உண்மையாக நாதஸ்வரம் யார் வாசித்தார்கள்னு தெரியுமா?
Next articleகாதலால் வாழ்க்கையின் விரக்திக்கு போன த்ரிஷா – மீண்டும் கம்பேக் கொடுத்து அசர வைத்த பின்னணி என்ன?