சிவாஜியின் தில்லானா மோகனாம்பாள் படத்தில் உண்மையாக நாதஸ்வரம் யார் வாசித்தார்கள்னு தெரியுமா?

0
41
#image_title

சிவாஜியின் தில்லானா மோகனாம்பாள் படத்தில் உண்மையாக நாதஸ்வரம் யார் வாசித்தார்கள்னு தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்து கொடுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் தமிழ் மட்டுமல்ல பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் சின்ன வயதிலிருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்டவராக இந்த சிவாஜி முதலில் மேடை நாடகங்களில் நடித்தார்.

இதனையடுத்து, தமிழில் முதன்முதலாக தமிழில் ‘பராசக்தி’ என்ற படம் மூலம் அறிமுகமானார். இதன் பின்பு தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். உணர்ச்சிப் பூர்வமாக நடிப்பதிலும், தமிழ் உச்சரிப்பதிலும், நல்ல குரல்வளமும், சிறந்த நடிப்புத் திறனும் கொண்டிருந்ததால, இவரை ‘நடிகர் திலகம்’ என்றும், ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

சிவாஜி நடிப்பில் வெளியான படங்களில் மறக்க முடியாத படம் என்றால்அது தில்லானா மோகனாம்பாள் படம். இன்றுகூட அந்தப் படத்தைப் பார்த்தால் சிவாஜியின் நடிப்பும், பத்மினியின் நடனமும் மிக அற்புதமாக இருக்கும்.

இப்படத்தில் உண்மையாக நாதஸ்வர் வித்வானாகவே சிவாஜி வாழ்ந்திருப்பார். அப்படத்தில் உண்மையாக நாதஸ்வரம் வாசித்தவர் பற்றிய தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகிவுள்ளது.

அப்படத்தில் நாதஸ்வரம் வாசித்தது மதுரையைச் சேர்ந்த நாதஸ்வர வித்வான்களான எம்.பி. என். சேதுராமன் மற்றும் பொன்னுசாமி சகோதரர்கள் தானாம்.

சிவாஜி நாதஸ்வரத்தை அவர்கள் வாசிக்கும் போது முகபாவங்கள், அழுத்தம் கொடுக்கிற விரலசைவு, நாதஸ்வரத்தை பிடிக்கும் முறை. இதை அனைத்தினையுமே உன்னிப்பாக கவனித்தாராம். சென்னையில் 20 நாட்கள் படப்பிடிப்புக்கான ரிகர்சல் நடைபெற்றதாம்.

ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் ரிக்கார்டிங் நடந்தபோது, ஒருமுறை ரிகர்சல் டைமில் சிவாஜி ஒருபக்கமும், பொன்னுசாமி குழுவினர் ஒரு பக்கம் வாசித்துக் கொண்டிருந்தனராம். இவர்கள் வாசிக்க எதிரே சிவாஜி வாசிக்கிற மாதிரி நடிக்க வேண்டுமாம். படப்பிடிப்பு முடிந்த பிறகு நடிப்பு எப்படி இருந்தது என்று சிவாஜி கேட்பாராம்.

ஒரிஜினலே நீங்க தான். நாங்க இல்ல… நாங்க சும்மா ஜெராக்ஸ் மாதிரி இருந்தோம் என்று நாதஸ்வர் வித்வான்களே கூறினார்களாம்.

author avatar
Gayathri