ரேஷன் அரிசியை பயன்படுத்துபவர்கள் கவனிக்கவும்.. ஆபத்து காத்து கொண்டிருக்கிறது!!

0
101
#image_title

ரேஷன் அரிசியை பயன்படுத்துபவர்கள் கவனிக்கவும்.. ஆபத்து காத்து கொண்டிருக்கிறது!!

நாடு முழுவதும் நியாயவிலை கடைகள் மூலம் புழுங்கல் அரசி,பச்சரிசி,சர்க்கரை,துவரம் பருப்பு,கோதுமை,பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.இந்த பொருட்கள் விலை மலிவாக கிடைப்பதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இன்றைய நவீன காலத்தில் உணவு முறையில் அதிகளவு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காததால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டு விடுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.மற்ற அரிசிகளைப் போல் அல்லாமல் இதில் அயர்ன் சத்து,வைட்டமின் பி12,போலிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இந்த அரிசியை உணவாக எடுத்து வருவதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து,வைட்டமின்கள் மற்றும் அயர்ன் சத்துக்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த அரிசியானது எக்ஸ்ட்ரூட்டர் என்ற கருவியை பயன்படுத்தி செறிவூட்டப்படுகிறது.இந்த அரிசியானது PHH – AAY அட்டை தாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.அதுமட்டும் இன்றி இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை மத்திய உணவுத் திட்டம்,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகியவற்றிற்கு மத்திய அரசு வழங்கி வருகிறது.

இந்த செறிவூட்டப்பட்ட அரிசியால் உடலில் இரத்த அழுத்தம்,குடலில் நோய் தோற்று பாதிப்பு,நீரிழவு நோய் பாதிப்பு ஏற்படும் என்ற செய்தி தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது.இது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.

இந்நிலையில் தற்பொழுது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் அச்சத்தை போகும் விதமாக செறிவூட்டப்பட்ட அரிசிகளில் இரத்த சோகை பாதிப்பு இருப்பவர்கள் இந்த அரிசியை பயன்படுத்த வேண்டாம் என்ற விழிப்புணர்வு வாசகத்தை அச்சிடுமாறு இந்திய உணவு கழகமானது தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு புது உத்தரவு ஒன்றை பிறப்பித்து ஏறுகிறது.

ஏற்கனவே இந்த செறிவூட்டப்பட்ட அரிசிப் பைகளில் +F,Fortified with Iron,Folic Acid, and Vitamin B12 என்ற வாக்கியம் அச்சிடப்பட்டிருக்கும் நிலையில் தற்பொழுது அதனுடன் “இரத்த சோகை பாதிப்பு இருப்பவர்கள் இந்த அரிசியை சாப்பிட வேண்டாம்” என்ற வாசகமும் புதிதாக இடம் பெற இருக்கிறது.

Previous articleமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சுப்மான் கில்!!! எப்பொழுது இந்திய அணியில் விளையாடுவார்!!? 
Next articleஇன்று தங்கத்தின் விலை நிலவரப் பட்டியல்!