வாலி படத்தால் நீதிமன்றம் வரை சென்ற எஸ்.ஜே.சூர்யா – வெளியான தகவல்!
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரை அவரது ரசிகர்கள் தல, காதல் மன்னன், அல்டிமேட் ஸ்டார் என்று கொண்டாடுகிறார்கள்.
கடந்த 1933ம் ஆண்டு முதன் முதலாக தமிழ் சினிமாவில் அமராவதி படம் மூலம் அறிமுகமானார் அஜித். இதனையடுத்து, பல போராட்டங்களையும், இன்னல்களையும் கடந்து தன்னை ஒரு வலிமையான நடிகராக மாற்றினார்.
நடிப்பைத் தவிர சர்வதேச எஃப்-1 ரேஸர், துப்பாக்கி சுடுதல், ஆசிரியர் என பல துறைகளில் இவர் சாதனைப் படைத்து வருகிறார். இதுவரை நடிகர் அஜித் 50க்கும் மேற்பட்ட படங்களில்ந டித்துள்ளார்.
ஆனால் நடிகர் அஜித் நடித்த வாலி படம் நீதிமன்றம் வரை சென்றது. இது குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
1999ம் ஆண்டு வாலி படம் வெளியானது. இப்படத்தில் அஜித், சிம்ரன் நடித்தனர். ஜோதிகா இப்படத்தில் அறிமுகமானார். இப்படத்தை இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்கினார். இப்படம் வெளியாக சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
இப்படத்தை என்ஐசி ஆர்ட்ஸின் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிக்க, தேவா இசையமைத்திருந்தார். இப்படத்தின் இந்தி உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கினார். ஆனால், இப்படத்தில் சூர்யாவுக்கு எதிராக வழக்குப் போடப்பட்டது.
நீதிமன்றத்தில் கதை இயக்குனருக்கே சொந்தம் எந்த ஆவணத்தினை எஸ்.ஜே.சூர்யா சமர்பிக்கவில்லை. ஆதலால் தடையில்லாமல் இடைக்கால அனுமதி வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா நீதிமன்றத்தில் 2 மணி நேரம் சாட்சியம் கொடுத்தாராம்.