லியோ திரைப்பட வெளியீட்டு உரிமம்!!! விலகிய ரெட்ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம்!!!

0
30
#image_title

லியோ திரைப்பட வெளியீட்டு உரிமம்!!! விலகிய ரெட்ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம்!!!

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிம விவகாரத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட்ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் கூறியுள்ளது அடுத்து தமிழகத்தில் லியோ திரைப்படத்தை வெளியிடுவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்பொழுது தமிழகத்தில் எது எடுத்தாலும் லியோ என்ற வார்த்தை ஒரு முறையாவது வந்து விடுகிறது. லியோ நடிகர் விஜய் நடித்த திரைப்படம் ஆகும். லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். தற்பொழுது அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் ஸ்டைலில் நடிகர் விஜய் அவர்கள் இரண்டாவது முறையாக நடித்து இருக்கின்றார். இதற்கு முன்னர் நடிகர் விஜய் அவர்கள் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் லியோ திரைப்படத்தில் தற்பொழுது நடித்துள்ளார். லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் அவர்கள் தயாரித்துள்ளார். உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் இரத்து செய்யப்பட்டது. அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது.

அந்த பல காரணங்களால் ஒன்று லியோ திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்ற உதயநிதி அவர்களின் ரெட்ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் முயன்றுள்ளது. இதனால் ஏற்பட்ட சில விறைப்பு வெறுப்புகளால் ஆடிய லாஞ்ச் நடக்காமல் பொது என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த கேள்விகளுக்கு பதில் கூறும் விதமாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது லியோ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமம் பெறும் விவகாரத்தில் இருந்து உதயநிதி அவர்களின் ரெட்ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் விலகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து லியோ திரைப்படத்தை அதன் தயாரிப்பாளரான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கு முன்னர் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்து தமிழகத்தில் செவன் ஸ்கியீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டது. மேலும் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தையும் தமிழகத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.