ஒடிசா இரயில் விபத்தில் அடையாளம் காணப்படாத 28 உடல்கள்!!! இறுதிச் சடங்கு செய்த பெண் தன்னார்வலர்கள்!!!

0
114
#image_title

ஒடிசா இரயில் விபத்தில் அடையாளம் காணப்படாத 28 உடல்கள்!!! இறுதிச் சடங்கு செய்த பெண் தன்னார்வலர்கள்!!!

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்த அடையாளம் காணப்படாத 28 பேரின் சட்டங்களுக்கு பெண் தன்னார்வலர்கள் இறுதிச் சடங்கு செய்து தகனம் செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் கடந்த ஜூன் 2ம் தேதி நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது சென்னை முதல் ஷாலிமர் வரை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் மோதியது. மேலும் எதிர்திசையில் வந்த பெங்களூரு ஹவுரா அதிவிரைவு இரயிலும் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த இரயில் விபத்தில் 297 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 1100க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்து உறவினர்களால் அடையாளம் காணப்படாத 162 பேரின் சடலங்கள் புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

இதில் 134 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நான்கு மாதங்கள் ஆகியும் மீதம் உள்ள 28 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்படாமல் எய்ம்ஸ் மருத்துவமனையிலே வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அடையாளம் காணப்படாத 28 பேரின் உடல்களை தகனம் செய்ய புவனேஷ்வர் மாநகராட்சி முடிவு செய்தது.

இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அடையாளம் காணப்படாத 28 நபர்களின் உடல்களை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் புவனேஷ்வர் மாநகராட்சியிடம் ஒப்படைத்தது.

இதையடுத்து பெண் தன்னார்வலர்கள் இந்த அடையாளம் காணப்படாத 28 நபர்களின் உங்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்தனர். இதையடுத்து தகனம் செய்யும் பணியும் உடனடியாக தொடங்கப்பட்டது. இதையடுத்து அடையாளம் காணப்படாத 28 சடலங்கள் தகனம் செய்யப்பட்டதாக புவனேஷ்வர் மாநகராட்சி மேயர் சுலோச்சனா அவர்கள் நேற்று(அக்டோபர்11) அறிவித்தார்.

Previous articleஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டி!!! ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி!!!
Next articleஇஸ்ரேலில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் திட்டம்!!! ஆபரேஷன் அஜய் தொடங்கப்பட்டு உள்ளதாக வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு!!!