ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டி!!! ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி!!!

0
33
#image_title

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டி!!! ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி!!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி சதம் அடித்து சிறப்பாக விளையாடியதால் இந்திய அணி இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டி நேற்று(அக்டோபர்11) டெல்லியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன் பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சாஹிதி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து 80 ரன்கள் சேர்த்தார். அஸ்மத்துல்லா அரைசதம் அடித்து 62 ரன்கள் சேர்த்தார். இப்ரஹிம் ஜர்டன் 22 ரன்களும், குர்பாஷ் 21 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியில் பந்துவீச்சில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகைளயும், ஷர்தல் தக்கூர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

273 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணியின் தொடங்கிய வீரர்கள் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இந்திய அணியின் தொடங்கிய வீரர்கள் அதிரடியாக விளையாடத் தொடங்கினர். ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இணை முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அடித்தளம் போட்டது.

இஷான் கிஷன் 47 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய ரோஹாத் சர்மா சதம் அடித்தார். ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்த ரோஹித் சர்மா 131 ரன்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்துவிட்டு ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் களமிறங்கி விராட் கோஹ்லி அரைசதம் அடித்து தன்னுடைய பங்கிற்கு 56 ரன்கள் சேர்த்தார். இறுதியாக ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்கள் சேர்க்க இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியை பெற்றது. ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் அவர்கள் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியில் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய ரோஹித் சர்மா அவர்கள் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்தியா தனது மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை அக்டோபர் 14ம் தேதி எதிர்கொள்கின்றது.