இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக இதை செய்தால் போதும்!!
ஒருவர் வீட்டில் லட்சுமி தாயார் குடி அமர்ந்து விட்டார் என்றால் அந்த வீடு செல்வ செழிப்புடன் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம்.இதை தான் லட்சுமி கடாச்சம் என்று சொல்வார்கள்.நம்மில் பலரும் இதற்காக தான் பல்வேறு பரிகாரங்கள்,பூஜைகள் செய்து வருகிறோம்.ஆனால் சில வழிகளை தொடர்ந்து கடைபிடித்தால் லட்சுமி தாயார் நிரந்தரமாக வீட்டில் குடியிருப்பார்.
இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக செய்ய வேண்டியவை:-
*சோம்பேறி தனம் இருக்க கூடாது.நீண்ட நேரம் உறக்கம் இருக்க கூடாது.குறிப்பாக பகல் நேரத்தில் உறங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
*பணத்தை கணக்கு வைத்து செலவு செய்ய வேண்டும்.அதேபோல் இடது கைகளால் ஒருவருக்கு பணத்தை கொடுக்க கூடாது.
*பிறரின் வாழக்கை முறையை கண்டு பொறாமை கொள்ள கூடாது.
*பணத்தை தூக்கி ஏரியக் கூடாது.அதற்கு உரிய மதிப்பை வழங்க வேண்டும்.அப்பொழுது தான் லட்சுமி தாயார் வீட்டில் நிரந்தரமாக குடியிருப்பார்.
*செய்நன்றி மறக்கக் கூடாது.
*கோபத்தை தவிர்க்க வேண்டும்.
*வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை சிரித்த முகத்துடன் வரவேற்க வேண்டும்.
* தினமும் பூஜை அறையில் காலை 6 மணி மற்றும் இரவு 6 மணிக்கு தீபம் ஏற்ற வேண்டும்.
*கடன் வாங்குவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
*வீட்டில் வாசற்படியில் உட்காருவதை முற்றலும் தவிர்க்க வேண்டும்.அதேபோல் வீட்டு அம்மிக்கல்,ஆட்டுக்கல் உள்ளிட்டவைகள் மீது உட்காருவதை முற்றலும் தவிர்க்க வேண்டும்.
*மாலை 6 மணிக்கு மேல் தலை வாரக் கூடாது.
*இரவு நேரங்களில் துணிகளை துவைக்க கூடாது.
*எதற்கும் அளவோடு ஆசைப்பட வேண்டும்.
*பெண்கள் மாதவிடாய் நாட்களில் பூஜை அறைக்குள் செல்லக்கூடாது.
*வீட்டில் அரசி,பருப்பு மற்றும் உப்பு எப்பொழுதும் நிறைந்து இருக்க வேண்டும்.
*செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் வீடு துடைக்க கூடாது.