கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு!! இப்படி செய்தால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்!!
இந்திய உணவுகளில் தக்காளி பயன்பாடு அதிகளவில் இருக்கிறது.இந்த தக்காளி புளிப்பு மற்றும் இனிப்பு சுவையை கொண்டிருப்பதால் அவற்றை உணவில் சேர்க்கும் பொழுது உணவின் சுவை மேலும் கூடுகிறது.இந்த தக்காளியை வைத்து தொக்கு,சட்னி,கடையல்,ஊறுகாய்,சாதம் என்று பல வகை உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் தக்காளி குழம்பு.இந்த தக்காளி குழம்பை கேரளா ஸ்டைலில் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
*தக்காளி – 4 (நறுக்கியது)
*வெங்காயம் – 2 (நறுக்கியது)
*துருவிய தேங்காய் – 1/2 கப்
*பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
*கடுகு – 1 தேக்கரண்டி
*கறிவேப்பிலை – 1 கொத்து
*உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
தக்காளி குழம்பு செய்ய அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.எண்ணெய் காய்ந்ததும் அதில் 1 தேக்கரண்டி கடுகு,1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய 4 தக்காளி சேர்த்து நன்கு வதக்கி விடவும்.தக்காளி கலவை நன்கு வெந்து வந்ததும் அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் 1/2 கப் தேங்காய்,2 நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இந்த தேங்காய் கலவையை கொதிக்கும் தக்காளி குழம்பில் சேர்த்து கிளறி விடவும்.பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் 1 தேக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு 10 நிமிடம் வரை கொதிக்க விடவும்.பச்சை வாடை முழுமையாக நீங்கிய பின் அடுப்பை அணைக்கவும்.