கொரோனாவை வேகமாகக் கட்டுப்படுத்தும் ‘ரெம்டேசிவிர்’ – மருத்துவர்கள் நம்பிக்கை

0
145

கொரோனாவை வேகமாகக் கட்டுப்படுத்தும் ‘ரெம்டேசிவிர்’ – மருத்துவர்கள் நம்பிக்கை

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ துவங்கிய கொரோனா நோய்த் தொற்று தற்போது உலகம் முழுவதிலும் பரவி, மக்களின் அன்றாட வாழ்க்கையை முடக்கியுள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கு இது வரை 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ள நிலையில் சுமார் 32 லட்சத்திற்கு மேலானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

சமூக பரவலால் கொரோனா பரவாமல் இருக்கப் பல நாடுகளும் ஊரடங்கை அமல் படுத்தியிருந்தாலும் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனாவிற்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே உலகம் இதிலிருந்து மீள முடியும் என்ற நிலையில் உள்ளது. குறிப்பாக அமெரிக்கா கொரோனாவால் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.

சீனா, ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞ்சானிகள் கொரோனாவிற்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சீனா மற்றும் அமெரிக்கா கொரோனாவிற்க்காக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளை மனிதர்களுக்குச் செலுத்தி அதன் விளைவைச் சோதித்து வருகின்றனர். அந்த மருந்துகள் சரியாக வேலை செய்தாலும் அது மக்களின் பயன்பாட்டிற்கு வர ஜூலை மாதம் ஆகிவிடும் எனக் கூறப்படுகிறது.

தற்போது வரை அறிகுறியைப் பொருத்து அதற்கேற்றவாறு சிகிச்சை அளித்து வருகின்றனர் மருத்துவர்கள். மலேரியா நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தும் ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ மருந்தை கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் அது அனைவருக்கும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ‘ரெம்டேசிவிர்’ எனும் மருந்து கொடுத்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் இந்த மருந்தை எடுத்துக் கொண்டவர்கள் 31% விரைவாக கொரோனாவிலிர்ந்து மீள்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு மற்ற மருந்தை எடுத்துக் கொள்பவர் 15 நாட்களில் கொரொனாவிலிர்ந்து மீண்டு விடுவார்கள் என்றால் இந்த மருந்தின் மூலம் 11 நாட்களிலேயே மீண்டு விடலாம் எனக் கூறப்படுகிறது.

இதனால் கொரோனாவிற்கு எதிராக நல்ல பலன் அளிக்கும் ஒரே மருந்தாக ‘ரெம்டேசிவிர்’ உருவெடுத்துள்ளது. இதனால் இந்த மருந்தை மேலும் சோதனைக்குப்படுத்தப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சி துவங்கப்பட்டுள்ளது.

Previous articleபுதிய அறிகுறிகளுடன் பரவும் கொரோனா வைரஸ் : வெளியான பகீர் தகவல்..!!
Next articleமிரட்டும் கொரோனா… அச்சத்தில் மக்கள்… உலக நாடுகளில் என்ன தான் நடக்கிறது?