வீட்டில் செல்வம் செழிக்க “மருதாணி இலை தீபம்” வைத்து வாருங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!
இன்றைய காலத்தில் வாழ்க்கையை நகர்த்தி செல்ல பணம் மிகவும் அவசியமாகிறது. இந்த பணத்தை வீட்டில் நிலையாக வைத்திருக்க உழைப்பு + சில ஆன்மீக வழிகளை கடைபிடிப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் வீட்டில் செல்வம் கொழிக்க வீட்டு பூஜை அறையில் மருதாணி இலை தீபத்தை வையுங்கள்.
தேவையான பொருட்கள்:-
*மருதாணி இலை
*மண் அகல் விளக்கு
*விளக்கு திரி
*நெய்
*ஏலக்காய்
*கிராம்பு
*நாணயம்
*மஞ்சள் மற்றும் குங்குமம்
செய்முறை விளக்கம்:-
வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை மட்டும் தான் இந்த மருதாணி இலை தீபத்தை ஏற்ற வேண்டும். முதலில் தலைக்கு குளித்து விட்டு பூஜை அறைக்குள் நுழைய வேண்டும்.
பின்னர் வீட்டை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அடுத்து பூஜை அறையில் உள்ள காய்ந்த பூக்கள், பழங்கள், மாலைகள் உள்ளிட்டவைகளை நீக்கி விட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளவும்.
அடுத்ததாக பூஜை அறையில் லட்சுமி மற்றும் குபேரர் படத்திற்கு முன் ஒரு தாபூலம் வைத்து அதில் சிறிதளவு மருதாணி இலைகளை பரப்பி விடவும். அடுத்து அதில் சில்லறை காசுகளை போடுங்கள்.
பின்னர் அதில் 10 ஏலக்காய் மற்றும் 10 கிராம்பு சேர்த்துக் கொள்ளவும். அடுத்து மருதாணி தாம்பூலத்தில் ஒரு மண் அகல் விளக்கு வைத்து அதற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் வைக்கவும். பிறகு அதில் தேவையான அளவு சுத்தமான நெய் ஊற்றிக் கொள்ளவும்.
தொடர்ந்து விளக்கு திரி போட்டு வடக்கு அல்லது கிழக்கு முகமாக தீபம் ஏற்றவும். இவ்வாறு வாரத்தில் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை விளக்கு போட்டு வந்தால் வீட்டில் செல்வம் மற்றும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். மருதாணி இலைகளை வைத்து தீபம் ஏற்றினால் வீட்டில் மகாலட்சுமி மற்றும் குபேர பகவானின் அருள் பெற்று சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.