பல வருடங்களாக காத்திருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இதோ வந்துவிட்டது போட்டித்தேர்வு!!

0
106
Good news for graduate teachers who have been waiting for years!! Here comes the competition!!
Good news for graduate teachers who have been waiting for years!! Here comes the competition!!

பல வருடங்களாக காத்திருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இதோ வந்துவிட்டது போட்டித்தேர்வு!!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் நடைபெற்ற தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பெற்ற  தேர்வுகளில் சொற்ப கணக்கிலான எண்ணிக்கையிலேயே ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இது மாநிலத்தையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. வருங்கால தூண்கள் என அழைக்கப்படும் மாணவர், மாணவிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களே தகுதித் தேர்வில் வெற்றி பெறாத போது அவர்கள் எங்கனம் சிறந்த மாணவ, மாணவியர்களை உருவாக்கித் தர முடியும் என ஆய்வாளர்களால் பல முனைகளிலும் இருந்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த சூழ்நிலையில் இதனை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2022- ஆம் ஆண்டு முதல் இடைநிலை ஆசிரியர் பயிற்சி வகுப்பு மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதலில் தகுதித்தேர்வு எனப்படும் தேர்வு நடைமுறையை கொண்டு வந்தது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே அடுத்து நடைபெறும் நியமன தேர்வில் பங்கு பெற்று வெற்றி பெற்றால் மட்டுமே மதிப்பெண் மற்றும் தகுதி அடிப்படையில் ஆசிரியர் பணியில் அமர்த்தப்படுவர்.

இதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள்- 1 கடந்தாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலும், அடுத்ததாக பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்- 2 இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் நடைபெற்றது.

அடுத்ததாக இந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு நியமன தேர்வு நடத்தபெற்று அதன்மூலம் பணி நியமனம் செய்யப்படும் என ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில்  தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் எப்போது நியமனத் தேர்வு வரும் என காத்துக் கொண்டிருந்தனர்.

தற்போது அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக போட்டித்தேர்வு வருகின்ற ஜனவரி மாதம் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வுகள் வருகின்ற ஜனவரி மாதம் 7-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் தேதி விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு போட்டி தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி தேர்வுகளை எழுதுவதற்கு பட்டப்படிப்புடன் கூடிய பிஎட் எனப்படும் ஆசிரியர் பயிற்சி பாடம் முடித்திருக்க வேண்டும். மேலும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி அதில் தகுதி பெற்று இருக்க வேண்டும்.

காலியாக உள்ள பணியிடங்கள்:

தமிழ் -371,

ஆங்கிலம்- 214,

கணிதம்- 200,

இயற்பியல் -274,

வேதியியல் -273,

வரலாறு -346,

என மொத்தம் 2,222 காலி பணியிடங்கள் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளன.

Paper 2 Tet தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

No.of. Vacancy: 2222
Date of notification: 25.10.2023
Application open on: 01.11.2023
Last date: 30.11.2023
Exam date: 07.01.2023
Qualification: Any Ug degree with B.Ed and TNTET Paper 2 pass

Previous articleலைக்காவிடம் ஜேசன் சஞ்சையை சேர்த்து விட்டது இவர்தான்!!! பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் பேட்டி!!!
Next articleஇதை இணைக்காவிட்டால் ஏடிஎம் கார்டு சேவை நிறுத்தம்!! வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!