Arulmigu Arunachaleswarar Temple: சனாதனத்தை எதிர்ப்பவர்கள் தீப பத்திரிகையில் பப்ளிசிட்டி தேடலாமா – ஸ்டாலினை விளாசும் பொதுமக்கள்!!
திருவண்ணாமலை தீபத் திருவிழாவானது மிகவும் விசேஷமான ஒன்று. வருடம் தோறும் இந்த தீப திருநாளில் லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலைக்கு செல்வது வழக்கம். அதேபோல இந்த மகா தீபத்தை கான குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே அனுமதியும் வழங்கப்படும்.
தற்பொழுது தீபத்திருநாள் வருவதற்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் இது குறித்து வருடம் தோறும் பத்திரிக்கை அடிப்பது வழக்கம். அந்த வகையில் இம்முறை திருவண்ணாமலை தீபத் திருவிழா குறித்தான பத்திரிக்கையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
இது மக்களிடையே அதீத கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே இவ்வாறான கடவுள் அச்சடிக்கப்பட்ட பத்திரிகைகளை ஒரு சிலர் பூஜை அறையில் வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் தங்களின் விளம்பரத்திற்காக இவ்வாறு பத்திரிகைகளில் பெயர் போட்டிருப்பதால் வழிபட முடியாமல் மக்கள் கோபத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி பொதுப்படையாக அச்சடிக்கப்படும் பத்திரிகைகளில் ஏன் இவர்கள் தங்களின் விளம்பரத்தை செய்ய வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடவுளே இல்லை என்று சனாதனம் பேசுபவர்கள் ஏன் இதில் மட்டும் விளம்பரத்தை தேட வேண்டும் என அடுத்தடுத்த கேள்விகளை முன்வைக்கிறனர். மேற்கொண்டு இந்த பிரச்சனையால் பத்திரிக்கை விநியோகிக்காமல் அப்படியே உள்ளது.முதல்வர் உள்ளிட்டோரின் பெயர்களை நீக்கினால் மட்டுமே மீண்டு பத்திரிகை விநியோகம் செய்யப்படும்.